வியாழன் இரவு டுவிட்டர் தளம் திடீரென முடங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைமக்கு திரும்பியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூகுள், ஃபேஸ்புக் தளங்கள் முடங்கின. அப்போது அதன் பயனர்கள் டுவிட்டர் தளத்திற்கு வந்து, ஃபேஸ்புக் முடங்கியதை குறித்து கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில், நேற்று வியாழன் இரவு 10 மணியளவில் டுவிட்டர் தளமும் திடீரென முடங்கியது.
டுவிட்டர் முடங்கியதால் பல பயனர்கள் புதிதாக ட்வீட் செய்ய முடியவில்லை என்று புகார்கள் எழுப்பினர். டவுன் டெடக்டர் தளத்தில் வெளிவந்துள்ள தகவலின்படி, டுவிட்டர் செயலிழந்த சில நிமிடங்களில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக இரவு 10 மணியளவில் (IST) டுவிட்டர் முடங்கியது.
undefined
டவுன் டெடக்டர் தகவலின்படி, அதிகபட்ச புகார்கள் ஸ்மார்ட்போன் பயனர்களால் தரப்பில் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் டெஸ்க்டாப்/லேப்டாப்களைப் பயன்படுத்தும் பயனர்கள் சிலருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டது.
டுவிட்டரில் ட்வீட் செய்யவோ, நேரடியாக மெசேஜ் அனுப்பவோ அல்லது புதிய நபர்களை பின்தொடரவோ இயலவில்லை என்று பலர் புகார் அளித்திருந்தனர். இந்த மாத தொடக்கத்திலும் இதே போன்ற சிக்கல்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ட்வீட்களை இடுகையிட முயற்சிக்கும் சில பயனர்களின் மொபைல் ஸ்கிரீனில் இவ்வாறு நோட்டிபிகேஷன் வந்தது: "ட்வீட்களை அனுப்புவதற்கான தினசரி வரம்பை நீங்கள் தாண்டிவிட்டீர்கள்" என்று ஒரு பாப்-அப் வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் மற்ற ட்விட்டர் பயனர்களின் திரையில், "மன்னிக்கவும், உங்கள் ட்வீட்டை எங்களால் அனுப்ப முடியவில்லை" என்ற பாப்-அப் வந்துள்ளது.
இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!
மற்ற கணக்குகளைப் பின்தொடர முயன்ற ட்விட்டர் பயனர்களுக்கு, "வரம்பு முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் உங்களால் அதிக நபர்களைப் பின்தொடர இயலாது" என்று மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது. ட்விட்டர் பயனர்களால் நேரடி செய்திகளையும் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன.