‘பண்ண மாட்டேனு சொல்லிட்டு இப்படி பண்ணிட்டியே எலானு’ பரிதாப நிலையில் டுவிட்டர் பணியாளர்கள்

By Asianet Tamil  |  First Published Feb 23, 2023, 11:57 PM IST

நவம்பர் 2022க்கு பிறகு பணி நீக்கம், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்காது என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், மீண்டும் டுவிட்டர் நிறுவனத்தில் சில பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவுடன் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலையும், பிற உயர் பொறுப்பில் இருந்தவர்களையும் நீக்கினார். மேலும் சில தீவிர மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். எலான் மஸ்க்கின் நிர்வாகத்திற்கு கீழ், பெரும்பாலான ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், பலர் தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். இதனையடுத்து நவம்பர் 2022 க்குப் பிறகு டுவிட்டரில் பணிநீக்கம் செய்யப்படாது என்று எலான் மஸ்க் உறுதியளித்தார். இருப்பினும், அவர் கூறியதற்கு நேர்மாறாக இரண்டு முறை பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் மற்றொறு பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த முறை விற்பனை மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களை பெரிதும் பாதித்துள்ளது.  இது தொடர்பாக தி வெர்ஜ் செய்தித்தளத்தில் வெளிவந்துள்ள தகவலின்படி, விற்பனை மற்றும் பொறியியல் துறைகளில் உள்ள ஊழியர்கள் கடந்த வாரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

Tap to resize

Latest Videos

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் நேரடியாக எலான் மஸ்க்கிடமே பணிபுரிந்தவர். ட்விட்டரின் விளம்பர வணிகத்திற்கான இன்ஜினியரிங் பிரவை நிர்வகித்து வந்தவர். பணியாளர்கள் இனி வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று எலான் மஸ்க் உறுதியளித்த பிறகு மூன்றாவது முறையாக இந்த பணிநீக்கம் நடைபெற்றுள்ளது.

மேலும், ட்விட்டர் விளம்பரங்கள் செயல்படும் விதத்தை மேம்படுத்துமாறு ஊழியர்களிடம் மஸ்க் கேட்டுக் கொண்டதாகவும், அவ்வாறு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வார காலக்கெடுவை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை.
மஸ்க்கின் 'ட்விட்டர் 2.0' இல் விளம்பரங்கள் மூலம் பணமாக்குதல் மேலாளராகப் பணிபுரிந்த மார்சின் கட்லூஸ்கா என்பவர், ஒரு வாரத்தில் மேம்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் டுவிட்டரில்  விளம்பரங்களை மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். 

இந்திய டுவிட்டர் அலுவலகம் மூடல்! பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தல்!!

இதே போல் மார்சின் என்பவர் லிங்க்ட்இன் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘விளம்பரங்கள் மற்றும் பணமாக்குதல் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் நல்ல சகிப்புத்தன்மை, ஆர்வம், அனுபவம் பெற்றுள்ளனர். அவர்கள் முழு அமைப்புகளைப் பற்றிய ஆழமான அறிவுடன் நிலைமையைக் கையாள்வதில் சிறந்த நிபுணர்கள்' என்றும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் பணி நீக்க நடவடிக்கைகள் தொடருமா என்ற அச்சத்திலேயே டுவிட்டர் பணியாளர்கள் உள்ளனர்.
 

click me!