வரவிருக்கும் OnePlus Nord 3 ஸ்மார்ட்போனில் இவ்வளவு அம்சங்கள் உள்ளதா?

By Asianet Tamil  |  First Published Feb 23, 2023, 11:42 PM IST

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிதாக OnePlus Nord 3 ஸ்மார்ட்போனை தயாரித்துள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.,
 


அண்மையில் ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான OnePlus 11, OnePlus 11R ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு , OnePlus Nord 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள், விவரங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக ஆன் லீக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள விவரங்களின்படி,   OnePlus Nord 3 ஸ்மார்ட்போனானது ஜூன் நடுப்பகுதி முதல் ஜூலை இடையே அறிமுகப்படுத்தப்படும். இதற்கு முன்பு OnePlus Nord 2 ஆனது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல், இந்த முறையும் அதே காலக்கட்டத்தில் அறிமுகமாகலாம்.  

Tap to resize

Latest Videos

undefined

சிறப்பம்சங்களைப் பொறுத்த வரை, OnePlus Nord 3 ஆனது முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 6.72-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும்,  ஆக்டா-கோர் டைமென்சிட்டி 9000 பிராசசர்,  8ஜிபி/16ஜிபி ரேம்,   128ஜிபி/256ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Hi !

Today, I have the complete and final specs sheet of the to share with you!😏

This time, on behalf of 👉🏻 https://t.co/lfaH24SNKx pic.twitter.com/urG5t4Lxw4

— Steve H.McFly (@OnLeaks)

 


கேமரா எப்படி இருக்கும்?

OnePlus Nord 3 போனினல் மூன்று கேமரா அமைப்பு இருக்கும். 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ சென்சார் கேமரா ஆகியவை இடம்பெறும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16MP கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  80W SuperVooc சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 5,000mAh  சக்தி கொண்ட பேட்டரியும் இருக்கலாம். 

OnePlus 11 5G எப்படி இருக்கு? நீடித்து உழைக்குமா? இதோ முழு விவரங்கள்!

முன்னதாக, Onelus Nord CE 3 படங்கள் சில வெளிவந்தன. அதன்படி, Nord CE 3 போனின் பின்புறத்தில் பளபளப்பான தோற்றமும், எல்இடி ஃபிளாஷ் உடன் டிரிபிள்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவையும் இருக்கும். ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் இருப்பதாக கூறப்படுகிறது. 

 

click me!