மிகக்குறைந்த விலையில் Poco C55 அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

By Asianet TamilFirst Published Feb 22, 2023, 2:23 PM IST
Highlights

இந்தியாவில் புதிதாக Poco C55 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெதர் ஃபினிஷ் மற்றும் 5,000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளனது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் முன்னனி நிறுவனமாக போகோ உள்ளது. அண்மையில் ரூ. 30,000 பிரிவில் Poco X5 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ரூ. 10,000 விலைக்குள், பட்ஜெட் ரக வாடிக்கையாளர்களுக்காக மிகவும் மலிவு விலையில் Poco C55  போனை அறிவித்துள்ளது. இது வழக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பழைய Poco போன்களைப் போலவே தோற்றத்தில் உள்ளது. 

ஃபிளிப்கார்ட் தளத்தில் போகோ சி55 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களும், விற்பனையும் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,499 விலையில் வருகிறது. Poco போனின் அதிகாரப்பூர்வ விலை 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.9,499 ஆகும். இதே போல் 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை ரூ.10,999 ஆகும். வரும் பிப்ரவரி 28 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Forest Green, Cool Blue மற்றும் Power Black ஆகிய வண்ணங்களில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ரூ. 500 உடனடி தள்ளுபடி ஆரம்பவிற்பனை சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொறுத்தவரை, Poco C55 ஆனது 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பேனல் HD+ விதத்தில் இயங்குகிறது. நீர் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு IP52 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்புறம் லெதர் போன்ற டிசைன் தோற்றம் உள்ளது. இந்த வகையான டிசைன் ரூ.10,000 பிரிவில் அவ்வளவு எளிதில் மற்ற போன்களில் இருக்காது.

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை லீக் ஆனது!

மீடியாடெக் ஹீலியோ G85 SoC பிராசசர் உள்ளது, இது இதற்கு முன்பு வெளிவந்த சில பட்ஜெட் போன்களிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதி உள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி இன்டர்னல் மெமரியை அதிகப்படுத்தும் அம்சமும் உள்ளது.  

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போனில் வெறும் Android 12 OS தளமும், MIUI 13 ஸ்கின் மட்டுமே உள்ளது பின்புறத்தில், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட், HDR முறை என பல அம்சங்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிக்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. 

click me!