Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை லீக் ஆனது!

By Asianet TamilFirst Published Feb 21, 2023, 1:35 PM IST
Highlights

ஷாவ்மி 13, ஷாவ்மி 13 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் அறிமகமாக உள்ள நிலையில், அவற்றின் விலை விவரங்கள் இப்போதே சில தளங்களில் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் ஷாவ்மி நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் புத்தம் புதிய ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், அறிமுக நிகழ்விற்கு முன்னதாகவே, Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Lite 5G ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரோலண்ட் குவாண்ட் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  சமீபத்தில், Xiaomi 13 Lite ஸ்மார்ட்போனின் படங்கள் கசிந்தன, இது Xiaomi Civi 2 5G போனின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் எனக் கூறப்படுகிறது. 

ஷாவ்மி 13 சீரிஸ் விலை விவரங்கள்:

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi 13 5G ஸ்மார்ட்போனானது EUR 999க்கு (சுமார் ரூ. 88,117) அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படகிறது. அதே மாடல் சீனாவில் CNY 4,299 (தோராயமாக ரூ. 51,000) ஆகும். Xiaomi 13 சீனாவில் 6.36-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதம், HDR10+, 1900 nits வரை பிரைட்னஸ், பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் வந்தது. 

இதில் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 10 மெகா பிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கேமரா, 12 மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் கேமரா ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்தமாக லைகா-பொருத்தப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
ஷாவ்மி 13 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசசர் இருப்பதால், ஸ்மார்ட்போன் திறன்மிக்கதாக இருக்கலாம். அதற்கு ஏற்ப 12ஜிபி வரை ரேம், 512ஜிபி வரை மெமரி உள்ளன. இது 67W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் இருப்பது சிறப்பு.

OnePlus 11 5G எப்படி இருக்கு? நீடித்து உழைக்குமா? இதோ முழு விவரங்கள்!

இதேபோல் மறுபுறம், ஷாவ்மி 13 லைட் 5G 8GB+128GB மாடலின் விலை EUR 499 (தோராயமாக ரூ. 44,000) ஆகும். Xiaomi Civi 2 5G உடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் விலை உயர்ந்ததாகத் தெரிகிறது. சீனாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுக்கு CNY 2,399 (தோராயமாக ரூ. 28,900) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!