குறைந்த விலையில் Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Published : Feb 23, 2023, 01:33 PM IST
குறைந்த விலையில் Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சுருக்கம்

6.5 இன்ச்HD+ டிஸ்ப்ளே, ஹீலியோ G37 பிராசசருடன் குறைந்த விலையில் Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

கடந்த ஆண்டு லாவா நிறுவனம் யுவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதற்கு முந்தைய A22 ஸ்மார்ட்போனுட் ஒப்பிடும்போது இதில் மீடியாடெக் ஹீலியோ G37 SoC பிராசசர் இருப்பது சிறப்பு. மேலும் 3GB விர்ச்சுவல் ரேம் உடன் 4GB ரேம் உள்ளது.

லாவாவின் புதிய யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 தளம் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன், VGA டெப்த் சென்சார் கேமர உள்ளது. முன்பக்கத்தில் 5MP சென்சாரில் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர், USB Type-C , 10W சார்ஜிங் வசதி, 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.

விலை மற்றும் விற்பனை தேதி:

Lava Yuva 2 Pro ஆனது கிளாஸ் வயிட், கிளாஸ் கிரீன், கிளாஸ் லாவண்டர் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ. 7,999 ஆகும். வாடிக்கையாளர்கள் லாவா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வெளிக்கடைகளில் வாங்கலாம்.  9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12,000 வரையிலான கல்வி சார்ந்த உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்காக Doubtnut உடன் லாவா கூட்டு சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை லீக் ஆனது!

லாவா யுவா 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே: 6.5-இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) HD+ டிஸ்ப்ளே
  • பிராசசர்: IMG PowerVR GE8320 GPU கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 12nm பிராசசர்
  • ரேம் மெமரி: 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கலாம்
  • பதிப்பு: ஆண்ட்ராய்டு 12
  • சிம் வகை: இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • கேமரா: 13MP பின்பக்க கேமரா, VGA டெப்த் சென்சார், VGA கேமரா, LED Flash, 5MP முன்பக்க கேமரா
  • சென்சார்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
  • இதர அம்சங்கள்: 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • பரிமாணங்கள்: 164.5x76x9mm; எடை: 204 கிராம்
  • 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, GPS + GLONASS, USB Type-C
  • பேட்டரி: 10வாட் சார்ஜிங்குடன் 5000எம்ஏஎச் பேட்டரி
     

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்