100 ரூபாய்க்குள் BSNL ரீசார்ஜ் பிளான்! 4G டேட்டா பேக் விவரங்கள் இதோ!!

By Asianet Tamil  |  First Published Feb 23, 2023, 11:21 PM IST

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 100 ரூபாய்க்குள் 4ஜி டேட்டா பேக் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்களை இங்குக் காணலாம்.
 


மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 100 ரூபாய்க்குள்  நான்கு 4ஜி டேட்டா வவுச்சர்கள் உள்ளன. அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளிக்கும். 

BSNL பொறுத்தவரையில் ஏற்கனவே இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 4G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, BSNL இன் 4G டேட்டா வவுச்சர்களை நீங்கள் தைரியமாக முன்னெடுத்து பயன்படுத்தலாம். நீங்கள் BSNL டவர் நல்ல கிடைக்கும் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் திட்டத்திற்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.

Tap to resize

Latest Videos

இந்த டேட்டா வவுச்சர்கள் இயல்பாக 4G இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் BSNL இன் 4G நெட்வொர்க் கவரேஜின் கீழ் வந்தால் நீங்கள் 4G நெட்வொர்க் சேவையைப் பெறுவீர்கள். இல்லையெனில், 3ஜி அல்லது 2ஜி சேவையைப் பெறுவீர்கள். சரி இனி ரூ.100க்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய அனைத்து டேட்டா-மட்டும் திட்டங்களைப் பார்ப்போம் .

பட்டியலில் முதல் பிளான் ரூ.16 ஆகும். இது வெறும் 1 நாள் வேலிடிட்டி, 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டம் பயனர்கள் தங்களுடைய டேட்டா தீர்ந்துவிட்டால், ஒரு நாளுக்கான டேட்டா மட்டும் வேண்டுமென்றால், 16 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவது திட்டம் ரூ.94 திட்டமாகும், இது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், பயனர்கள் டேட்டாவை மட்டுமின்றி 200 நிமிடத்திற்கான வாய்ஸ் கால் பலன்களையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்துடன் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Facebook, Google நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் செய்த காரியம்!

மூன்றாவது திட்டம் 97 ரூபாய்க்கு வருகிறது. இந்த திட்டத்தில், 15 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடேட் வாய்ஸ் கால், தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம். டேட்டா முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். 

கடைசியாக, ரூ 98 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் 22 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம். டேட்டா தீர்ந்ததும் இன்டர்நெட் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் எதுவும் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
 

click me!