Facebook, Google நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் செய்த காரியம்!

By Asianet Tamil  |  First Published Feb 23, 2023, 12:51 PM IST

OpenAI  தளத்தில் எக்கச்சக்கான கூகுள்,பேஸ்புக் முன்னாள் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது மட்டுமின்றி, முன்பு அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களும் OpenAI குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


செயற்கை நுண்ணறிவுமிக்க ChatGPT தளமானது ஆனது மனிதர்களைப் போலவே பதிலளிப்பது மற்றும் கவிதை எழுதுதல், கட்டுரைகள் எழுதுதல், குறியீடு எழுதுதல் மற்றும் பலவற்றில் திறன் கொண்டதாக உள்ளது. படிப்படியாக, மக்கள் ChatGPT தளத்தை பல்வேறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த OpenAI தளமானது 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பல்வேறு இன்ஜினியர்களால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், OpenAI தளத்தில் முன்னாள் கூகுள், பேஸ்புக் ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு அமேசான், ஆப்பிள் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களும் OpenAI குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் தரப்பில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, OpenAI-ல் தற்போது சுமார் 59 முன்னாள் கூகுள் ஊழியர்களும் 34 முன்னாள் மெட்டா ஊழியர்களும் உள்ளனர். இத தவிர அமேசான், ஆப்பிள் நிறுவனங்களில் இதற்கு முன்பு பணிபுரிந்த ஊழியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

ChatGPT சொன்னதை கேட்டு சமையல் ரெசிபி செய்த நெட்டிசன்! விளைவு!!

OpenAI இன் ஆரம்பம்

மனிதகுலத்திற்கு பேருதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு OpenAI நிறுவப்பட்டது. சாம் ஆல்ட்மேன், எலோன் மஸ்க் இதில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, எலான் மஸ்க் 2018 ஆம் ஆண்டு OpenAI இலிருந்து விலகினார். ஏனெனில் அவரது மற்ற இரண்டு நிறுவனங்களான SpaceX மற்றும் Tesla ஆகியவையும் AI தொழில்நுட்பங்களில் பணிபுரிந்தன. 2019 ஆம் ஆண்டில், OpenAI தன்னை லாபகரமான நிறுவனமாக அறிவித்து, மைக்ரோசாப்ட் மற்றும் பிற பெரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது. மைக்ரோசாப்ட் தற்போது OpenAI உடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளது.

சாட் ஜிபிடி தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் பிங் வளர்ந்துள்ளது. சாட் ஜிபிடி தளத்தைப் போலவே கூகுள் நிறுவனமும் பார்டு என்று பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவுமிக்க தளத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!