ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவைகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில், 5ஜி கிடைக்கும் இடங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் உங்கள் பகுதி இடம்பெற்றுள்ளதா என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏர்டெலை காட்டிலும் ஜியோ நிறுவனம் புயல் வேகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது.
ஜியோ 5ஜி விரிவாக்கம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் கூடுதலாக 20 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியது. இதனால், இந்தியாவில் ஜியோ 5ஜி கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் ஜியோ 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ள இடங்கள்: போங்கைகான், வடக்கு லக்கிம்பூர், சிவசாகர், டின்சுகியா (அஸ்ஸாம்)
பாகல்பூர், கதிஹார் (பீகார்), மோர்முகவ் (கோவா), டையூ, காந்திதாம் (குஜராத்), பொகாரோ ஸ்டீல் சிட்டி, தியோகர், ஹசாரிபாக் (ஜார்கண்ட் ), ராய்ச்சூர் (கர்நாடகா), சத்னா (மத்திய பிரதேசம்), சந்திராபூர், இச்சல்கரஞ்சி (மகாராஷ்டிரா), தௌபல் (மணிப்பூர்), பைசாபாத், ஃபிரோசாபாத் மற்றும் முசாபர்நகர் (உத்தர பிரதேசம்).
5G சேவையில் உள்ள பிரச்சனை! உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தா உடனே இப்படி பண்ணுங்க!!
தமிழகத்தில் ஜியோ 5ஜி கிடைக்கும் இடங்கள்:
சென்னை. கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர்
தமிழகத்தில் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் இடங்கள்:
தமிழகத்தில் 5 பகுதிகளில் மட்டுமே ஏர்டெல் 5ஜி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஓசூர், திருச்சி. கூடிய விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.