5G சேவையில் உள்ள பிரச்சனை! உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தா உடனே இப்படி பண்ணுங்க!!

By Asianet Tamil  |  First Published Feb 22, 2023, 1:22 PM IST

இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோருக்கு போன் பேசுவதில் சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.


இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தது. ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 277க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை கொண்டு வந்துள்ளது. இதேபோல் ஏர்டெல் நிறுவனம் சுமார் 133க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.  இந்த நிலையில், 5ஜி சேவை ஆன் நிலையில் இருக்கும் போது, போன் கால் வந்தால், திடீரென கட் ஆவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சனை பல பயனர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

என்ன காரணம்?

Tap to resize

Latest Videos

5ஜி சேவையில் போன் இயங்கும் போது போன் கால் துண்டிக்கப்படுவது குறித்து இன்ஜினியரிங் பேக்ட்ஸ் என்ற சேனலின் யூடியூபர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, 5ஜி டவர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால், அடிக்கடி சிக்னல் கிடைக்காத போது, 5ஜியில் இருந்து 4ஜிக்கு தானாகவே மாறுகிறது. வழக்கமாக நெட்வொர்க் 4ஜி - 5ஜி இடையே மாறும்போது பெரிய பாதிப்பு இருக்காது.  ஆனால், ஒரு போன் காலில் இருக்கும் போது அவ்வாறு 5ஜி நெட்வொர்க்கில் இருந்து, டவர் சரியாக கிடைக்காமல் 4ஜிக்கு மாறினால் போன் திடீரென கட் ஆகிவிடும் என்கிறார்.

iPhone 15 Pro முதல் பார்வை வெளியீடு! டைப் ‘சி’ சார்ஜர் வந்துவிட்டது, ஆனால்…

அப்போ என்ன செய்யலாம்?

எனவே, 5ஜி டவர் நமக்கு அருகில் இருக்கும் போது தாராளமாக 5ஜி சேவையை பயன்படுத்தலாம். அதுவே, 5ஜி டவர் சரியான தொலைவில் இல்லாத போது, 5ஜி ஆன் செய்யாமல், 4ஜி சேவையை பயன்படுத்துவதே இதற்கு ஒரு நல்ல தீர்வாகும். 5ஜி  டவர் மற்றும் 5ஜி சேவைகள் முழுமையாக கிடைக்கும் வகையில் இவ்வாறு 4ஜி மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது. இதற்கு போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று 5ஜி ஆப்ஷனை 4ஜி ஆக மாற்ற வேண்டும்.

 

click me!