Mozilla Firefox ஆண்ட்ராய்டு பிரவுசரில் மூன்று புதிய எக்ஸ்டென்சன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பிரவுசிங் அனுபவத்தை வழங்கும், பயனர்களின் வேலைகளை எளிதாக்கும்.
இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரவுசர் ஃபயர்பாக்ஸ் ஆகும். Mozilla Firefox பிரவுசரில் தற்போது மூன்று விதமான எக்ஸ்டென்சன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1. ஏதாவது ஒரு இணையதளத்தில் பதிவு செய்யும் போது பயனர் மின்னஞ்சல் முகவரியை மறைத்தல், 2. URL ஐப் பகிரும் போது அதிலுள்ள டிராக்கிங் குறியீடுகளை அகற்றுதல், 3. கட்டுரையை ஒலிக்கச் செய்தல் ஆகும்.
'Firefox Relay' ஐப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை மறைக்க முடியும். இது அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க உதவும் சிறந்த பாதுகாப்பு அம்சமாக வரும். குறிப்பாக உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேகரித்து மார்கெட்டிங் நோக்கத்திற்காக யாரும் பயன்படுத்த முடியாது. பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்களை உள்ளீட முடியும்.
ReadAloud என்பது கட்டுரைகளை வாசித்து காட்டும் அம்சமாகும். பயனர்கள் எந்தவொரு கட்டுரையையும் பார்த்து படிப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒலிக்கச் செய்து கேட்கலாம். இது அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இது செய்தி தளங்கள், வலைப்பதிவுகள், ரசிகர் புனைகதை, பாடப்புத்தகங்கள், பள்ளி மற்றும் வகுப்பு இணையதளங்கள், ஆன்லைன் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடப் பொருட்கள் உட்பட பல்வேறு இணையதளங்களில் வேலை செய்யும் என்று ஃபயர்பாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள கூகுள் அலுவலகத்தில் 450 பேருக்கு மேல் பணி நீக்கம்!
இறுதியாக' ClearUTL ' என்ற எக்ஸ்டென்சன் உருவாக்கப்பட்டுள்ளது, இது பயனர்கள் பாதுகாப்பற்ற URL லிங்குகளில் இருந்து டிராக்கிங் குறியீடுகளை அகற்ற உதவுகிறது. அடையாளம் தெரியாத ஒரு URL என்பது, அதில் பல டிராக்கிங் குறியீடுகளும் இருக்கலாம். இது உங்களைக் கண்காணிக்கப் பயன்படுகிறது.
இத்தகைய கண்காணிப்பு கூறுகளை ClearURL எக்ஸ்டென்சன்கள் அகற்றிவிடும். எனவே உங்களிடம் எளிமையான மற்றும் தெளிவான URL மட்டுமே இருக்கும்.
பயனர்கள் இந்த எக்ஸ்டென்சன்களை ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் நேரடியாக இயக்கி பயன்படுத்தலாம். புதிய அம்சங்களை பெறுவதற்கு, ஃபயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.