Twitter போல் Facebook, Instagram தளத்திலும் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம்?

By Asianet Tamil  |  First Published Feb 21, 2023, 2:36 PM IST

டுவிட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டண சந்தா முறை அமல்படுத்தப்பட்டது போல, ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமிலும் கட்டண சந்தா வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் போல, மெட்டா நிறுவனத்திற்கு உட்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களிலும் கொண்டு வரப்படுகிறது. மெட்டாவின் இந்த புதிய சரிபார்க்கப்பட்ட சந்தா மூலம் பயனர்கள் Instagram மற்றும் Facebook தளத்தில் அதிகாரப்பூர்வ நபராக அடையாளப்படுத்தி கொள்ள முடியும். அவ்வாறு பயனர்களின் சுயவிவரம் சரிபார்க்கப்பட்டால், அவர்களது பெயர்களுக்கு அடுத்ததாக ஒரு நீல நிற டிக் பெறுவார்கள். 

ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகளுக்கு எதிராக, உண்மையான பயனரின் கணக்கை காட்டும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தையும் இந்த சந்தா வழங்கும். தற்போது, ​​மெட்டா வெரிஃபைடு ஆனது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மாதத்திற்கு $11.99 (சுமார் ரூ. 990) என்றும், ஐபோன் பயனர்களுக்கு மாதத்திற்கு $14.99 (சுமார் ரூ. 1,240) என்றும் சோதனை முறையில் உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் Meta Verified இன் விலையானது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பாதிப்பு இல்லாத வகையில் மாற்றியமைக்கப்படும். அதாவது, ரூ.1,200 என்று வைத்துக் கொண்டால், ட்விட்டர் ப்ளூ (ரூ. 900) மற்றும் நெட்ஃபிக்ஸ் பிரீமியம் திட்டத்தை (ரூ. 649) விட சந்தா விலை அதிகமாக இருக்கும். எனவே, மற்ற சந்தாவுக்கு நிகராகவே மெட்டாவின் சந்தாவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சரிபார்ப்பு குறியீடு குறித்து மெட்டா நிறுவனம் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் கணக்கை சரிபார்க்க அரசாங்க ஐடியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. Meta Verified மூலம் பலவகையான அம்சங்கள் கிடைக்கும். குறிப்பாக சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் குறியீடு, ஆள்மாறாட்ட போலி கணக்குகளில் இருந்து பாதுகாப்பு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, எளிதாக அடையாளம் காணுதல் ஆகியவை அடங்கும். 

OTP மெசேஜ்க்கும் கட்டணம்! Twitter பயனர்களுக்கு எலான் மஸ்க் விளக்கம்!!

கிரியேட்டர்கள், தொழில் செய்பவர்கள், சமூகம் உள்ளிட்டோருக்கு இந்த ப்ளூ சந்தாவை உருவாக்க உள்ளதாக மெட்டா கூறுகிறது. பழைய முறையின் மூலம் ப்ளூ டிக் பெற்றவர்கள் அப்படியே அதைத் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும் தனது பேஸ்புக்கில் இதுதொடர்பான விவரங்களை பகிர்ந்துள்ளார். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு பழைய முறை மூலமாகவே ப்ளூ டிக் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, இன்ஸ்டாகிராமுக்கு சென்று அமைப்புகள்> கணக்கு > கோரிக்கை சரிபார்ப்பு என்பதற்குச் செல்லவும். கோரிக்கை விடுத்தபிறகு உங்களுக்கான தகுதிநிலை 24 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும்.
 

click me!