Twitter அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்! பணியாளர்கள் ராஜினாமா எதிரொலி!!

By Dinesh TGFirst Published Nov 18, 2022, 7:08 PM IST
Highlights

டுவிட்டரில் பெரும் பணியாளர்கள் தங்கள் பொறுப்பு, பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் பணிபுரிந்த அலுவலகங்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைபற்றிய பிறகு, அந்நிறுவனத்தில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமூச்சாக அமல்படுத்தும்படி கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பாக சமீபத்தில் ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தார். எலான் மஸ்க் அனுப்பிய நோட்டீஸில், டுவிட்டரில் வேலை பார்க்க வேண்டும் என்றால் "நீண்ட நேரம் கடுமையாக பணியாற்ற வேண்டும்", இல்லையெனில் மூன்று மாதம் சம்பளத்தை வாங்கி விட்டு வெளியேறிவிடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை நிராகரித்து பல ட்விட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களால் எந்த விதமான பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக டுவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ப்ளூம்பெர்க்கி தளத்தில் செய்திகள் வந்துள்ளன. அதன்படி, டுவிட்டர் அலுவலகங்கள் வரும் திங்கட்கிழமை வரை மூடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டுவிட்டர் தரப்பில் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பும் கிடைத்துள்ளன. 

அதில், ‘வணக்கம், நாங்கள் எங்கள் அலுவலக கட்டிடங்களை தற்காலிகமாக மூடுகிறோம், மேலும், பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும், வெளியேறுவதற்கும் முக்கியமான அனைத்து பேட்ஜ் அணுகலும் இடைநிறுத்தப்படும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது, 

நவம்பர் 21 ஆம் தேதி, அதாவது திங்கள் அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும். உங்கள் நெகிழ்வுத்தன்மைக்கு நன்றி. சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் இரகசிய நிறுவனத் தகவலைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்கி இருக்கவும். ட்விட்டரின் அற்புதமான எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Twitter-ல் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்யும் பணியாளர்கள்! Elon Musk பதில்..

பணியாளர்களின் துணிச்சல் முடிவு!

இதற்கு முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் பணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் பணியாளரள்கள் தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டுமா இல்லையா என்று தெரிவிக்கும்படி கூறியுள்ளார். மேலும், இதை நவளம்பர் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தார். சுருக்கமாக சொல்லப்போனால், சர்வதிகாரத்தை கையில் எடுத்தது போல் எலான் மஸ்க் செயல்பட்டார். ஆனால், ஊழியர்கள் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல், துணிந்து ராஜினாமா செய்துள்ளனர்.

டுவிட்டருக்கு கண்ணீர் அஞ்சலி:

எக்கச்சக்க பணியாளர்கள் டுவிட்டரில் இருந்து வெளியேறியதால், டுவிட்டர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை குறிப்பிடும் வகையில் #RIPTwitter #TwitterDown உள்ளிட்ட பல ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகியுள்ளன. ஆனால், இதற்கு கவலைப்பட போவதில்லை என்று எலான் மஸ்க் பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!