டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு சான் ஜோஸ் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்போது இந்தியா டெஸ்லாவின் சோலார் பவர்வால் பேட்டரி தொழில்நுட்பத்தை ஆராய்வதில் ஆர்வம் காட்டியது. அப்போது பிரதமர் மோடியை மஸ்க் பின் தொடரவில்லை. இந்த நிலையில் தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை, எலான் மஸ்க் தனது டுவிட்டர் மூலமாக அவரை பின் தொடரத் தொடங்கினார். இதுவரையில் 194 பேரை பின் தொடர்ந்திருந்த நிலையில், இன்று 195-வது ஆளாக பிரதமர் மோடியை பின் தொடர்ந்துள்ளார். டுவிட்டரில் 134.3 மில்லியனுடன் அதிகம் பாலோயர்ஸ்களையும் மஸ்க் கொண்டுள்ளார்.
Elon Musk is now following Narendra Modi ()
— ELON ALERTS (@elon_alerts)
அமேசான் பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை
ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். ஒபாமா, 132 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியோ 87 மில்லியன் பாலோயர்ஸ்களையும், 2535 பேரையும் அவர் பின் தொடர்கிறார். இந்த நிலையில் தான் எலான் மஸ்க் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடரத் தொடங்கியுள்ளார். இன்று காலை எலான் மஸ்க் இப்போது நரேந்திர மோடியை பின்பற்றி வருகிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மஸ்க் தனது எலெக்ட்ரிக் வாகன (EV) நிறுவனமான டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டு வர சில காலமாக முயற்சி செய்து வருகிறார். இருப்பினும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களை இங்கு விற்பனை செய்யவும், சேவை செய்யவும் அனுமதிக்கும் வரை, நாட்டில் உற்பத்தி ஆலையை நிறுவ மாட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் மஸ்க் கூறியிருந்தார்.
முதல் முறையாக மனிதருக்குப் பரவிய தாவரப் பூஞ்சை நோய்! மருத்துவர்கள் அதிர்ச்சி!
ஆனால், இந்த ஆண்டின் தொடக்கட்தில் மத்திய சாலைப் போக்குவாத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மஸ்க் இங்கு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்குவது வரவேற்கத்தக்கது என்றும், டெஸ்லா சந்தையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கார்க்கள் உருவாக்க நினைத்தால் அது முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும், மாற்று கருத்து ஒன்றையும் கூறியிருந்தார். அதாவது, இந்தியாவில் டெஸ்லா தயாரிக்க தயாராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால், எல்லா திறன்களும் இந்தியாவில் உள்ளது. விற்பனையாளர்கள் முதல் அனைத்து வகையான தொழில்நுட்பங்களும் உள்ளன. இதன் மூலமாக மஸ்க் தங்களது செலவை குறைத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.
ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!
எனினும், மஸ்க் டுவிட்டரில் மோடியை பின் தொடர காரணங்கள் குறித்து பலரும் அறிந்திருந்தாலும் சிலர், இது ஒரு சாதாரண விஷயம் தான் என்று கூறி வருகின்றனர்.
Twitter Logo : நாய்க்கு பதில் மீண்டும் பறக்கும் குருவி! பழசுக்கு மாறிய ட்விட்டர் லோகோ!
Elon Musk is now following Narendra Modi ()
— ELON ALERTS (@elon_alerts)