ரூ.132க்கு புதிய குடும்பச் சந்தா! அசத்தும் Truecaller

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 10:51 AM IST

ட்ரூகாலர் ஒரு புதிய 'பேமிலி பிளான்' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 5 பயனர்கள் வரை ஒரே கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்


புதிய ட்ரூகாலர் 'பேமிலி பிளான்' ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக நிறுவனம் கூறுகிறது, இருப்பினும் பிமைரி மெம்பர்  ஐபோனுடன் ட்ரூகாலர் பயனரைச் சேர்க்கலாம். புதிய பிரீமியம் (மாதம் ரூ. 39 அல்லது ஆண்டுக்கு ரூ. 399) மற்றும் பிரீமியம் கனெக்ட் (மாதம் ரூ. 75 அல்லது ஆண்டுக்கு ரூ. 529) ஆகும். 

இதுபோன்ற தனிப்பட்ட திட்டங்களுடன் கணக்கு இணைக்கப்படுகிறது. தற்போதுள்ள பிரீமியம் சந்தாதாரர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க விரும்பினால் இந்தத் திட்டத்திற்கு அப்கிரேடு செய்ய வேண்டும், மேலும் இதன் விலை மாதத்திற்கு ரூ.132 (அல்லது ஆண்டுக்கு ரூ. 925).

Tap to resize

Latest Videos

ட்ரூ காலர் அம்சங்களைப் பொறுத்தவரையில், Truecaller இன் Premium Connect திட்டங்கள் மேம்பட்ட ஸ்பேம்-தடுப்பு கொண்டுள்ளது. மேலும், Truecaller இன் சுயவிவரத்தை யார் பார்த்தார்கள் என்பதைப் பார்க்கும் திறன், பிரீமியம் பேட்ஜ் மற்றும் விளம்பரமில்லா அனுபவம் போன்ற பல பலன்களை வழங்குகிறது. 

5G Available Cities : நாடு முழுவதும் 50 இடங்களில் 5ஜி சேவை!

குடும்பத் திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் இந்த நன்மைகளையும் அனுபவிக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள சந்தாதாரர்கள் Apple One அல்லது Spotify பேமிலி மெம்பர்கள் பிளான் போலவே, இதிலும் தனிப்பட்ட தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று Trucallers கூறுகிறது.

இந்த நேரத்தில், குடும்பத் திட்டம் அமெரிக்காவைத் தவிர உலகம் முழுவதும் வெளிவருகிறது. ட்ரூ காலர் நிறுவனம் தொடர்ந்து அதன் சந்தாவை மேம்படுத்துவதாகவும், அதில் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Truecaller கோல்ட் சந்தாவிற்கு குடும்பத் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 

click me!