வாட்ஸ்அப் நிறுவனத்தில் மீண்டும் ஒரு ராஜினாமா! அடுத்தடுத்து சிக்கல்கள்!!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 12:14 AM IST

வாட்ஸ்அப் இந்தியாவின் மற்றொரு உயர் அதிகாரியும் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


வாட்ஸ்அப் நிறுவனத்தில் ‘வாட்ஸ்அப் பே இந்தியா’ துறையின் தலைவராக பதவி வகித்து வந்தவர் வினய் சோலெட்டி.  முன்னதாக கடந்த 2021 அக்டோபரில் வாட்ஸ்அப் பேயில் வணிகர்கள் பேமெண்டில் தலைவராகவும், பின்னர் செப்டம்பர் 2022 இல் வாட்ஸ்அப் பே இந்தியா தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், தற்போது வினய் சோலெட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ லிங்க்ட் இன் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "வாட்ஸ்அப் பேயில் இன்று எனது கடைசி நாள், நான் வெளியேறுகிறேன், ​​இந்தியாவில் வாட்ஸ்அப்பின் செல்வாக்கையும், அளவையும் பார்ப்பது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. இதை பெருமையாக சொல்வேன்.
 
"WhatsApp இல் பெங்களூர் மெட்ரோவுக்கான QR டிக்கெட்டுகள்" போன்ற சில உலகளாவிய அளவில் முதல் பேமெண்ட் செயலி என்ற அம்சத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதை மற்ற எந்தவொரு பேமெண்ட் செயலியுடனும் ஒப்பிடமுடியாது. வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் பேயை மனமுவந்து பயன்படுத்துவதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உணர்கிறேன்.
எனது வாழ்நாள் முழுவதும் இந்த பெருமைகளை எடுத்து செல்வேன்” 

இவ்வாறு சோலெட்டி தனது லிங்க்ட் இன் பக்கத்தில் குறிப்பிட்டு பதவி விலகியுள்ளார். அவர் தனது எதிர்காலத் திட்டங்களைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. போஸ் வெளியேறியதை அறிவித்த பிறகு, வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட் அவரது "மகத்தான பங்களிப்பிற்கு" நன்றி தெரிவித்தார். அதில் அவர், 
"இந்தியாவில் எங்கள் முதல் வாட்ஸ்அப் தலைவராக அபிஜித் போஸின் மகத்தான பங்களிப்பிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது தொழில் முனைவோர் உந்துதல் எங்கள் குழுவிற்கு புதிய சேவைகளை வழங்க உதவியது, இது மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் வணிகங்களுக்கு பயனளிக்கிறது. இந்தியாவிற்கும் நாங்களுக்கும் வாட்ஸ்அப் இன்னும் நிறைய செய்ய முடியும். 'இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்," என்று கேத்கார்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதற்கு முன்பு வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியா பொதுக் கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் உட்பட பல உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு உயர் அதிகாரி ராஜினாமா செய்ததால், தொழில்நுட்ப நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் நிலவி வருகிறது.
 

click me!