Flipkart நிறுவனம் பிக் சேவிங் டேஸ் சேல் என்ற விற்பனையை அறிவித்துள்ளது, இது டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேவிங்ஸ் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடியாக இருக்கலாம். பல எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கும் சலுகைகள் இருக்கும். டிசம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 வரை இந்த ஆஃபர் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்ஷிப் உள்ளவர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே விற்பனை தொடங்கும், அதாவது பிளிப்கார்ட் பிளஸ் என்ற திட்டத்தில் சேர்ந்துள்ள, சேரும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 15 அன்று ஆஃபர் விற்பனையை பெற முடியும். Axis வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீத கேஷ்பேக் சலுகை இருக்கும். இதற்கு முந்தைய விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்த வங்கி கார்டு ஆஃபர் என்பது சற்று குறைவு தான்.
இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 சீரிஸ்களுக்கு சலுகைகள் கிடைக்குமா என்று குறிப்பிடவில்லை. இருப்பினும், ஒவ்வொரு சிறப்பு விற்பனையிலும் சில ஐபோன்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு நடந்த பிளாக் ப்ரைடே சேலில் ஐபோன் 13 க்கு ரூ 4,000 வரை தள்ளுபடி வழங்கியது.
முந்தைய அனைத்து பண்டிகை விற்பனை நிகழ்வுகளையும் தவறவிட்டவர்கள் இப்போதுள்ள விற்பனை மூலம் ஸ்மார்ட்போன் வாங்கலாம். இருப்பினும், கடந்த ஆண்டு வெளியான ஐபோனுக்கு நல்ல ஆஃபர் இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தீபாவளி விற்பனையின் போதுiPhone 13 ஐ 49,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சம் பொறுத்திருங்க.. இந்த 3 ஸ்மார்ட்போன்கள் வரப் போகுது!
Realme, Apple, Vivo, Poco மற்றும் பிற ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் ஃபோன்களுக்கும் ஆஃபர் இருக்கும் என்று விளம்பரங்கள் மூலம் தெரிகிறது. டேப்லெட்டுகள், மானிட்டர்கள், பிரிண்டர்கள் இன்னும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
டிவி, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தயாரிப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஆஃபர் இருக்கும். பிளிப்கார்ட் சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களை டிசம்பர் 15 அன்று முழுமையாக தெரியவரும்.