நீங்க உங்க பாஸ்வேர்டை இப்படியா வச்சுருக்கீங்க... அப்போ உடனே மாத்திருங்க..

By Dinesh TG  |  First Published Nov 16, 2022, 4:25 PM IST

இந்தியாவில் பெரும்பாலானோர் வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளையும், பாஸ்வேர்டு முறைகளையும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஆன்லைனில் உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று பாஸ்வேர்டு (கடவுச்சொல்) தான். இருப்பினும், பல நாடுகளில் எளிதான பாஸ்வேர்டுகளை தான் மக்கள் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள், இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

NordPass என்ற பாஸ்வேர்டு மேனேஜர் நிறுவனம், இந்தியாவின் முதல் 200 பொதுவான கடவுச்சொற்கள் மற்றும் அவை ஹேக் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10வது இடத்தில் 'googledummy' என்ற பாஸ்வேர்டு உள்ளது. இதை ஹேக் செய்ய 23 நிமிடங்கள் வரை ஆகும். இதேபோல் இரண்டாம் இடத்தில் 123456 என்ற பாஸ்வேர்டு உள்ளது. இதைத் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர், இதை வெறும் சில நொடிகளில் ஹேக் செய்துவிடலாம் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tap to resize

Latest Videos

இதற்கு முன்பு இதேபோல் கடந்த 2021 ஆண்டும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு  குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. அவற்றோடு ஒப்பிடும்போது, இந்த ​​2022 ஆண்டிலும், மிகபொதுவான 200 கடவுச்சொற்களில் 73% அப்படியே உள்ளது. Password@123, India@123, Pass@123 போன்றவற்றை இன்னுமே பலர் நாம் மட்டும் தான் பாஸ்வேர்டாக வைக்கிறோம் என நினைக்கின்றனர். ஆனால், இதை பெரும்பாலானோர் பயன்படுத்துவதாக அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள 83% பாஸ்வேர்டுகளை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஹேக் செய்யும் வகையில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ATM-ல் கிழிந்த நோட்டுக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Statista நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கையின்படி, இணையக் குற்றங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது நாடாக உள்ளது. பல ஆண்டுகளாக சைபர் கிரைம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, இருப்பினும்  வலுவான பாஸ்வேர்டுகளை அமைப்பதற்கு மக்கள் முயற்சி செய்யாமல் உள்ளனர். இதுவுமே பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுவதற்கான முக்கிய காரணியாக உள்ளது.

உலகளாவிய அளவில் பெரும்பாலானோர் Password, 123456, Qwerty, iloveyou, 111111 போன்றவற்றை தான் பாஸ்வேர்டுகளாக பயன்படுத்துகின்றனர். இந்த பட்டியலில் தற்போது BigBasket என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. 

பலவீனமான பாஸ்வேர்டு வைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது?

'Password' அல்லது '123456' போன்ற பலவீனமான, எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை ஹேக்கர்களால் மிக எளிதாக ஹேக் செய்யப்படலாம்.  குறிப்பாக பாஸ்வேர்டு கிராக்கிங் என்ற மென்பொருளானது தானாக இதுபோன்ற பாஸ்வேர்டு வார்த்தைகள், எண்களைப் பட்டியலிடும். இது ஹேக்கர்களுக்கு சாதகமாக உதவிகரமாக இருக்கும்.

click me!