200W சார்ஜருடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் iiQOO 11 Pro!

By Dinesh TG  |  First Published Nov 15, 2022, 11:47 PM IST

இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் iQOO 11 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று செய்திகள் வந்துள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்த ஜூலை மாதம் iQOO 10 Pro அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில், iQOO நிறுவனம் சீனாவில் iQOO 11 Pro ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கான பணிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, இது ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

iQOO 11 சீரிஸில் புத்தம் புதிய Snapdragon 8 Gen2 SoC பிராசசர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிராசசர் இன்னும் வெளியாகவில்லை. இந்த வாரம் தான் அமலுக்கு வருகிறது. அப்படியான புத்தம் புதிய பிராசசரும், Quad HD+ Samsung E6 120Hz AMOLED டிஸ்பளேவும் iQOO 11 சீரிஸ் ஸ்மார்ட்போனில் இருக்கலாம். 

Latest Videos

undefined

மேலும், 1440Hz PWM அளவிலான டிம்மிங், 16ஜிபி வரையிலான ரேம், 512ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று  எதிர்பார்க்கலாம், ஆனால் இந்தியாவில் எந்தப் பதிப்பு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Realme 10 விரைவில் அறிமுகம் !

iQOO 11 சீரிஸில் புதிய 1/1.5″ IMX8xx சீரிஸ் சென்சார் கொண்ட கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது, இதற்கு முன்பு வெளியான IMX866 சென்சாரை மேம்படுத்தப்பட்டு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. V2243A மாடல் iQOO 11 ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதற்கு ஏற்ப 5000mAh பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல்,  V2254A மாடல் iQOO 11 Pro ஸ்மார்ட்போனில் சற்று அதிகமாக 200W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

iQOO 11 சீரிஸ் ஸ்மார்ட்போனானது வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!