ATM-ல் கிழிந்த நோட்டுக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

By Dinesh TG  |  First Published Nov 15, 2022, 5:48 PM IST

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டுக்களும் வரக்கூடும். அவ்வாறு கிழிந்த அல்லது மோசமான நிலையிலுள்ள நோட்டுக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்குக் காணலாம்


இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் ஏடிஎம்களில் தான் பணம் எடுக்கின்றனர். அவ்வாறு ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கிழிந்த நோட்டுகள் வரும் சம்பவங்களும் நடக்கிறது. இந்த கிழிந்த நோட்டுகள் எதையும் வாங்க பயன்படுத்த முடியாத. ஏடிஎம்மில் இருந்து நோட்டை திரும்பப் பெற்ற பிறகு, அதை மீண்டும் போடவும் முடியாது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி ஒரு வழி வகுத்துள்ளது. அதன்படி இனி கிழிந்த நோட்டுகள் கவலைப்படத் தேவையில்லை. அதே ஏடிஎம் உடன் கூடிய வங்கிக் கிளைக்குச் சென்று இந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

பின்வரும் விஷயங்களை நினைவில் கொள்க:

Tap to resize

Latest Videos

ஏடிஎம்மில் இருந்து கிழிந்த நோட்டுகளை மாற்றும் போது, நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க தேதி, நேரம் மற்றும் ஏடிஎம் இருக்கும் இடம் ஆகியவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். நோட்டை மாற்ற இந்த விவரங்களை எல்லாம் வங்கியில் கொடுக்க வேண்டும். ஏடிஎம்களில் இருந்து பெறப்பட்ட ரசீதை வங்கியில் காட்ட வேண்டும், ரசீது இல்லை என்றால், வங்கியில் இருந்து பணம் எடுத்தவுடன் மொபைலுக்கு வரும் மெசேஜை காட்ட வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல்:

ஏடிஎம்களில் இருந்து பெற்ற சிதைந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வகுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஏடிஎம்மில் நோட்டுகளை செருகும் முன், நோட்டுகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும். அதற்குப் பிறகும், ஏடிஎம்மில் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்தால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் இருந்து பெறப்படும் சிதைந்த நோட்டுகளை மாற்றித் தருவதற்கு எந்த வங்கியும் மறுக்க முடியாது. வங்கி ஊழியர்கள் நோட்டுகளை மாற்ற மறுத்தால், புகார் அளிக்கலாம். ஏடிஎம்மில் இருந்து சிதைந்த நோட்டுகள் வந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் வங்கியிடம் உள்ளது. பொதுவாக ஏடிஎம்மில் பணம் போடும் ஏஜென்சி நிறுவனங்கள் இந்தப் பொறுப்பை ஏற்பதில்லை. கிழிந்த நோட்டுகள் குறித்து புகார் தெரிவிக்க எஸ்பிஐ வங்கியில் ஒரு ஆப்ஷன் உள்ளது.  crcf.sbi.co.in/ccf/ என்ற இணையதளத்திற்குச் சென்று வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்.

click me!