கிவி பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குளிர்காலத்தில் இந்தப் பழங்களைச் சாப்பிட்டால், பல நோய்களைத் தவிர்க்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிவி பழங்கள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த பழங்கள் நியூசிலாந்து உட்பட உலகின் பிரபலமான பகுதிகளில் பரவலாக வளர்க்கப்படுகின்றன. கிவியில் தாமிரம், பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது ஆண்டி ஆக்சிடண்டுகள் பண்பை கொண்டதாகும். மேலும் இப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. கலோரிகள், புரதம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள கிவி பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. கிவிஸ் இனிப்பு, புளிப்பு சுவை கொண்டது. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி அடைகிறது. அதனால் இதை குளிர்காலங்களில் அதிகம் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
நார்ச்சத்து நிறைந்துள்ளது
இந்த பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இது ஆரோக்கியமான எடை இழப்புக்கும் உதவுகிறது. குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
கிவி பழங்களில் என்சைம்கள் அதிகம். அவை உடலில் உள்ள புரதங்களின் செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கும். இது செரிமான அமைப்பின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
வைட்டமின் சி நிறைந்துள்ளது
எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், நமக்குத் தெரியாதது என்னவென்றால், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளில் கிவியும் ஒன்று. இந்தப் பழத்தில் 14 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும், இது 14 சதவீதம் அதிகமாகும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்தப் பழம் பயன்படுகிறது. இதில் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. தோல் மற்றும் முடிக்கு பல்வேறு வழிகளில் நன்மை புரிகிறது.
சருமத்தில் அரிப்பு தோன்றினால் லேசாக எடுத்துவிட வேண்டும்- புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்..!!
உறக்கம் நன்றாக வரும்
கிவி பழத்தில் செரோடோனின் என்கிற பொருள் உள்ளது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மூளையில் செரோடோனின் அளவு அதிகரிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கிவி பழத்தை தினமும் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
புற்றுநோயைத் தடுக்கிறது
கிவியில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் மற்றும் நார்ச்சத்து உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால், வயிறு, குடல், பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும் என்று மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.