டாட்டா நிறுவனத்தின் க்ரோமா ஷாப்பிங் தளத்தில் Croma Black Friday 2022 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் ஆஃபர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அமேசான் தான். மேலும் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ மார்ட் தளங்களும் ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன. இந்த நிலையில், டாட்டா நிறுவனத்தின் க்ரோமா தளத்திலும் இந்தாண்டிற்கான Black Friday ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, க்ரோமாவின் பிளாக் ப்ரைடே ஆஃபர் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டு ஆப்பிள் ஐபோன்கள், வாட்ச்சுகளுக்கு நல்ல ஆஃபர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான், பிளிப்காரட்டுடன் ஒப்பிடுகையில், க்ரோமாவில் ஆன்லைனைப் போல் ஆஃப்லைன் கடைகளும் உள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் க்ரோமா கடைக்கு சென்று நேரடியாகவே பொருட்களை பயன்படுத்தி பார்த்து வாங்கலாம். இதற்கு முந்தைய கடந்த ஆண்டு, க்ரோமா பிளாக் பிரைடே சிறப்பு விற்பனையில் எக்கச்க்க பொருட்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், நல்ல விற்பனையானது. அப்போது நவம்பர் 24 முதல் நவம்பர் 29 வரை என ஆறு நாட்களுக்கு ஆஃபர்கள் நீடித்தது. ஸ்மார்ட்போன்கள், இயர்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முறை எவ்வளவு நாட்கள் ஆஃபர்கள் நீடித்திருக்கும், என்னென்ன வகையான பொருட்கள் ஆஃபரில் கிடைக்கும் என்பது குறித்து தெரியவில்லை. இதுதொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக உடனடி தள்ளுபடியும் உண்டு.
Amazon Offer: ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறவிப்பு!
க்ரோமாவில் தற்போதுள்ள வழக்கமான சலுகைகள்:
க்ரோமா இணையதளத்தில் தற்போது குறிப்பிட்டுள்ள சலுகைகளின்படி, கேமரா, ப்ளூடூத் ஹெட்செட், ஸ்மார்ட் வாட்ச், ஹோம் தியேட்டர்கள், ஐபோன், ஸ்மார்ட் டிவிகள், இயர் பட்ஸ், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் உள்ளன. மேலும், விவரங்களுக்கு https://www.croma.com/ என்ற க்ரோமாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும், அதன் மூலமாக அதிகபட்சமாக 2,500 ரூபாய் வரையில் ஆஃபர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி ஆஃபர்கள், க்ரோமா ஆஃபர்கள், கேஷ் பேக் அனைத்தையும் பயன்படுத்தி முடிந்த வரையில், அதிகபட்ச தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்.
மேலும், அவ்வாறு பொருட்களை வாங்குவதற்கு முன்பு, மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் விரும்பும் பொருட்களின் விலை எவ்வளவு ரூபாய் என்பதையும் பார்த்துக்கொண்டு வாங்குவது சிறப்பு.