iPhone : இந்த ஐபோன் விலை.. ஃபெராரி காரை விட அதிகம் - அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

By Raghupati R  |  First Published Jul 8, 2023, 5:04 PM IST

இந்த ஆப்பிள் ஐபோன் ஒரு ஃபெராரியை விட விலை அதிகம். ஏன் தெரியுமா? ஆச்சர்ய தகவலை பற்றி இங்கு காண்போம்.


சந்தையில் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்று வரும்போது, ​​சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா, பிக்சல் ஃபோல்ட் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் பொங்கல் என்றாலே விலை உயர்ந்தது தான். இருப்பினும், ரஷ்ய நிறுவனமான கேவியரால் டயமண்ட் ஸ்னோஃப்ளேக் என்று அழைக்கப்படும் சிறப்பு பதிப்பான ஐபோன் 14 ப்ரோவின் விலை சுமார் 5 கோடி ரூபாய் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

Tap to resize

Latest Videos

பிரிட்டிஷ் நகை பிராண்டான கிராஃப் உடன் இணைந்து ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சிறப்பு பதிப்பை கேவியர் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சிறப்பு பதிப்பு ஐபோன்களில் மூன்று மட்டுமே உலகம் முழுவதும் உள்ளன. இது இந்தியாவில் ஃபெராரி எஃப்8 விலையைக் காட்டிலும் அதிகம். இந்த போனின் பின்புறம் பிளாட்டினம் மற்றும் வெள்ளைத் தங்கப் பதக்கத்தைக் கொண்டுள்ளது.

இது வட்டமான மற்றும் மார்க்யூஸ்-வெட்டப்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக ரூ.62 லட்சம். 18 காரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட பின் தகடு, 570 வைரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வடிவத்தைக் காட்டுகிறது. ஏராளமான வைரங்கள் மற்றும் அரிய உலோகங்களின் பயன்பாடு காரணமாக, சாதனத்தின் விலை சுமார் ரூ. 5 கோடியாக உயர்ந்தது.

கேவியரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் அதை வாங்கலாம். அதன் முழு விவரங்களையும் பார்க்கலாம். கூடுதலாக, கேவியர் தொலைபேசிக்கு முழு ஆண்டு உத்தரவாதத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் அடிப்படை 128 ஜிபி ரூ.1,39,900 விலையைக் கொண்டுள்ளது. இது ஆப்பிளின் மிக சமீபத்திய ஐபோன் மாடல் ஆகும். ஐபோன் 15 சீரிஸ் விரைவில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

Samsung Galaxy M34 5G : நோ ஷேக் கேமரா.. செம பேட்டரி.! மாஸ் கம்பேக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி M34 5G

click me!