நீங்கள் Threads செயலியில் பதிவு செய்தவுடன், உங்கள் Profile-தற்காலிகமாக மட்டுமே செயலிழக்கச் செய்ய முடியும்.
ட்விட்டருக்கு போட்டியாக, Threads என்ற செயலியை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இன்று தொடங்கினார். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்திற்குள், 10 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பதிவுசெய்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த புதிய Threads செயலியை, தற்போது, இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக மட்டுமே அணுக முடியும் தனியாக பதிவு செய்ய முடியாது.
Instagram-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க
மேலும் மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு பதிவு செய்யும் செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளார், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் Threads Profile-ஐ நீக்க முடியாது. உங்கள் Threads சுயவிவரத்தையும் தொடர்புடைய தரவையும் நிரந்தரமாக நீக்க, நீங்கள் அந்த செயலியை பதிவுசெய்யப் பயன்படுத்திய Instagram கணக்கையும் நீக்க வேண்டும். நீங்கள் Threads செயலியில் பதிவு செய்தவுடன், உங்கள் Profile-தற்காலிகமாக மட்டுமே செயலிழக்கச் செய்ய முடியும். உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கினால் மட்டுமே, உங்கள் Threads Profile-ஐ நீக்க முடியாது.
உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்க (Deactivate) செய்வது உங்கள் Instagram கணக்கைப் பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்தால் சிக்கல் தான். ஏனெனில், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்தால், உங்கள் இணைக்கப்பட்ட Threads சுயவிவரமும் தானாகவே செயலிழக்கும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்கச் செய்ய முடியும். இதனால் பயனர்கள் அடிக்கடி சுயவிவரத்தை செயலிழக்க செய்ய முடியாது. எனவே வாரத்திற்உ ஒரு முறை செயலிழக்க செய்யும் விருப்பத்தை அவர் கொடுத்துள்ளார். எனவே, நீங்கள், Threads செயலியில் இருந்து விலக வேண்டும் எனில் உங்கள் சுயவிவரத்தை செயலிழக்க செய்வதே ஒரே வழி..
உங்கள் Instagram Threads சுயவிவரத்தை நீக்குவது அல்லது செயலிழக்கச் செய்வது எப்படி:
உங்கள் த்ரெட்ஸ் சுயவிவரத்தை உங்களால் சுயாதீனமாக நீக்க முடியாது என்பதால், உங்கள் சுயவிவரத்தை செயலிழக்கச் செய்ய, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்கச் செய்தால் என்ன நடக்கும்?
உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்கச் செய்தவுடன், உங்கள் பதிவுகள் மற்றவர்களின் பதிவுகளுடனான உங்களின் உரையாடல்களும் காணப்படாது. உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்கச் செய்வது உங்கள் Threads தரவை நீக்காது அல்லது உங்கள் Instagram கணக்கைப் பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் தனித்தனியாக இடுகைகளை நீக்க வேண்டும். நீங்கள் Threads விரும்பவில்லை மற்றும் அதை நிரந்தரமாக நீக்க விரும்பினால், உங்கள் Instagram கணக்கையும் நீக்குவது தான் ஒரே வழி.