டெலிகிராம் செயலியில் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் அட்டகாசமான அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப்பைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டது டெலிகிராம் செயலி ஆகும். இன்னும் சொல்லப்போனால் பல அம்சங்கள் டெலிகிராமுக்கு வந்த பிறகே அதை பார்த்து வாட்ஸ்அப் செயலியிலும் கொண்டு வரப்படுகிறது. அந்த அளவிற்கு அப்டேட்டுகளை வாரி வழங்குவதில் டெலிகிராம் முன்னனியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், டெலிகிராம் செயலியில் திங்களன்று முக்கியமான சில அப்டேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ப்ரீமியம் பயனர்களுக்கு எக்கச்சக்க புதிய ஈமோஜி பேக்குகள் வழங்கப்படுகிறது. டெலிகிராம் குரூப்களில் தனியாக தலைப்புகளை உருவாக்கி, அதில் அரட்டையடிக்கும் அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடியோ மெசேஜ்களை, ஆடியோ மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றி அனுப்பும் அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பாவெல் துரோவ் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
"இன்றைய டெலிகிராம் அப்டேட்டைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.
இது பெரிய குரூப்களில் உள்ளவர்கள் தலைப்புகளை உருவாக்கி கலந்துரையாடலம். இது கிட்டத்தட்ட இதற்கு முன்பு இருந்த ஆன்லைன் கலந்துரையாடல் (Forums) போல் ஒரு தலைப்பின் கீழ் பேசும் வகையில், தற்கால சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.
200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குரூப்கள் இப்போது தனியாக "தலைப்புகளை" உருவாக்கலாம். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாம் பேசினோம் என்பதை அந்த தலைப்புகளை வைத்து எளிதாகப் படிக்க முடியும்.
குழந்தைங்க கிட்ட ஸ்மார்ட்போன் கொடுக்கிறீங்களா? அப்போ உஷார்..!
எல்லாவற்றுக்கும் மேலாக பேசுவதை எழுத்துக்களாக மாற்றும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எந்தவொரு சமூக ஊடக செயலியிலும் கொண்டு வராத அம்சமாகும்.
கடந்த மாதம் வெளியான கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் உள்ளது. அத்தகைய பிரீமியம் ஸ்மார்ட்போனில் உள்ள அம்சத்தை, அனைவருக்கும் பயன்படும் வகையில், டெலிகிராம் செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, அதையே எழுத்து வடிவமாக மாற்றலாம். வீடியோ காலில் பேசுவதை எழுத்துக்களாக மாற்றலாம். தற்சமயத்தில் இது ஆங்கில மொழிக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளுக்குமான ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.