BSNL நெட்வொர்க்கில் 499 ரூபாய்க்கு புதிதாக பிராட்பேண்ட் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே 499 ரூபாய் பிளானும் இருப்பதால், இந்த புதிய பிளானில் என்ன வித்தியாசம் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் பிராட்பேண்ட் சேவை குறிப்பிடத்தக்க வகையில் செயலாற்றி வருகிறது. ஜியோ பைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவற்றுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிலும் தடையில்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் உள்ளன.
அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக 499 ரூபாய்க்கு ஒரு பிளான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே 499 ரூபாய்க்கு ஒரு பிளான் ஏற்கெனவே உள்ளது. அதே பிளானை பெயர் மாற்றம் செய்து புதிய பிளான் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பழைய பெயரை கொண்ட பிளானும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரே விலையில், ஒரே பலன்களில் இரண்டு பிளான்கள் தற்போது உள்ளன.
1. BSNL Fibre Basic ( 1 நவம்பர் 2022):
இந்த பிளானின்படி, மாதம் ரூபாய் 499 செலுத்த வேண்டும். இதற்கு 40 Mbps வேகத்தில் மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படும். டேட்டா முடிந்ததும், இன்டெர்நெட்டின் வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும். இந்த பிளானை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
2. Fibre Basic NEO ( 1 நவம்பர் 2022):
இந்த பிளானின்படி, மாதம் ரூபாய் 449 செலுத்த வேண்டும். இதற்கு 30 Mbps வேகத்தில் மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படும். டேட்டா முடிந்ததும், இன்டெர்நெட்டின் வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும். இந்த பிளானை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
என்ன வித்தியாசம்:
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த Fibre Basic NEO பிளான் வெறும் 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்படும், அதன்பிறகு தானாகவே ரூ.499 பிளானுக்கு மாறிவிடும், அதாவது 6 மாதத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் ரூ.499/மாதம் செலுத்த வேண்டும்.
உங்க ஏரியாவில் ஜியோ 5ஜி இருந்தும் 5ஜி கிடைக்கலையா? காரணம் இதுதான்
வெறும் ஆறு மாத பலனுக்காக Fibre Basic NEO என்ற பிளானை, 50 ரூபாய் வித்தியாசத்தில் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இது எந்த வகையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பது சந்தேகமே. மற்ற தனியார் துறை நெட்வொர்க்குகள் 5ஜியைத் தாண்டி, 6ஜி சேவைக்கான திட்டங்களை வகுக்கத் தயாராகிவிட்டன. ஆனால், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இன்னும் 4ஜி கூட முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
தனியார் துறைக்குப் போட்டியாக, பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே பல பிஎஸ்என்எல் அலுவலகங்கள் அதிகாரப்பூர்வமாக வாடகைக்கு விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை குறித்த முழுமையான விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்: http://www.ap.bsnl.co.in/tariff_2022/FTTH_plans.pdf