வாட்ஸ்அப், டெலிகிராம் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

By SG BalanFirst Published Dec 27, 2023, 8:40 PM IST
Highlights

புதிய தொலைத்தொடர்பு மசோதா மூலம் மூன்று சட்டங்கள் மாறுதல் அடைகின்றன. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

புதிய தொலைத்தொடர்பு மசோதாவின் வரம்பில் OTT நிறுவனங்கள் இல்லாதபோதும் அவை தொடர்ந்து பழைய சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

“OTT நிறுவனங்கள் 2000ஆம் ஆண்டின் IT சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் OTT நிறுவனங்கள் இல்லை” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். இதனால் சில ஓடிடி நிறுவனங்கள் எழுப்பிய கவலைகள் தீர்க்கபட்டுள்ளன.

தொலைத்தொடர்பு மசோதா மக்களவையில் புதன்கிழமையும் (டிசம்பர் 20) ராஜ்யசபாவில் வியாழக்கிழமையும் (டிசம்பர் 21) நிறைவேற்றப்பட்டது. சட்டமாக மாறுவதற்கு முன், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய சட்டத்தின் மூலம் 1885ஆம் ஆண்டின் இந்திய தந்தி சட்டம், 1933 ஆம் ஆண்டின் வயர்லெஸ் தந்தி சட்டம் மற்றும் 1950ஆம் ஆண்டின் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடைமை) சட்டம் ஆகியவை மாறுதல் அடைகின்றன.

கடந்த வாரம், மெட்டாவின் இந்திய பொதுக் கொள்கையின் இயக்குநரும் தலைவருமான ஷிவ்நாத் துக்ரால், சக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் புதிய தொலைத்தொடர்பு மசோதா குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புதிய மசோதாவில் OTT தளங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், மசோதாவில் உள்ள சில சொற்கள் OTT இயங்குதளங்களுக்கும் பொருந்துக்கூடும் என்று கவலை எழுந்தது.

இந்தச் சட்டம் புலனாய்வு நிறுவனங்கள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்களைப் விசாரணைக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்றும் இதனால், சிக்னல், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் உள்ள என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் சேவை கேள்விக்கு உள்ளாகலாம் என்றும் கூறப்படுகிறது.

click me!