Deepfake படங்களைத் தடுப்பது உங்க பொறுப்பு! சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

By SG Balan  |  First Published Dec 27, 2023, 3:44 PM IST

ஏற்கெனவே நவம்பர் மாதத் தொடக்கத்தில் சமூக ஊடக தளங்களுக்கு இதேபோன்ற வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டன. இப்போது இரண்டாவது முறையாக அதேபோன்ற அறிவுறுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு இணங்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு மீண்டும் ஆலோசனைகளை அனுப்பியுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரிக்கப்படும் 'டீப்ஃபேக்' எனப்படும் போலியான படங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நவம்பர் மாதத் தொடக்கத்தில் சமூக ஊடக தளங்களுக்கு இதேபோன்ற வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டன. இப்போது இரண்டாவது முறையாக அதேபோன்ற அறிவுறுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

"தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை, குறிப்பாக IT விதிகளின் 3(1)(b) விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பயனர்களுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியப்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கிரிப்டோ கரன்சி மோசடியில் 95 லட்சம் போச்சு! உங்க பணம் பத்திரமாக இருக்க இதைத் தெரிஞ்சுக்கோங்க!

சமூக ஊடக தளங்களுடன் ஒரு மாதமாக நடைபெற்ற விவாதங்களை அடுத்து இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தீபாவளியை ஒட்டி தனது ஆதரவாளர்களுடன் நடத்திய உரையாடலின் போது டீப்ஃபேக் படங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

பின்னர், டீப்ஃபேக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் விரைவில் வகுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நவம்பர் மாதம் தெரிவித்தார். ஆனால், அதற்கான வரைவு எதுவும் வெளிவரவில்லை. தகவல் தொழில்நுட்ப விதிகளில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வைரலானதை அடுத்து, டீப்ஃபேக்குகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறது. அந்த வீடியோ தொடர்பாக டெல்லி போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

விரைவில் வருகிறது பாரத் அரிசி! கிலோ 25 ரூபாய் விலையில் கிடைக்குமாம்!

click me!