படையெடுக்கும் புதுப்புது 5ஜி ஸ்மார்ட்போன்கள்... விலை குறையும் 4ஜி மொபைல்கள்... எதை வாங்கலாம்?

By SG BalanFirst Published Jun 13, 2023, 12:27 PM IST
Highlights

மொபைல் விற்பனை சந்தையில் 5G ஸ்மார்ட்போன்கள் பாதிக்கு மேல் அதிகரித்துவிட்டதால், சில்லறை விற்பனையாளர்கள் 4G மொபைல் போன் இருப்பை தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மொபைல் விற்பனை சந்தையில் 5G ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை தொட்ட நிலையில், விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் 4G மொபைல் போன்களை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் 4G மொபைல் ஸ்டாக்கை க்ளியர் செய்ய சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, இரண்டு மாதங்களாக கடைகளில் ஸ்டாக் வைத்துள்ள் 4G மொபைல்கள் விற்கப்படாமல் தேங்கியுள்ளன என்று தெரிகிறது. தற்போது 4G மொபைல் இருப்பு சராசரியைவிட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5G ஸ்மார்ட்போன்களுக்கான தேவைக்கு முற்றிலும் மாறாக உள்ளது.

ஐபோன் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! பிளிப்கார்டில் இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்!

மொபைல் சந்தையில் 5G ஸ்மார்ட்போன்களின் அளவு கடந்த ஏப்ரல் பாதம் 50 சதவீதத்தைத் எட்டியுள்ளது. இது இன்னும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 5G ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை குறைந்திருப்பதும் அதன் தேவையை அதிகரித்துள்ளது. இப்போது 15,000 ரூபாய்க்குள் சில 5G ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன.

5ஜி ஸ்மார்ட்போன்கள் இப்போது ரூ.15,000 விலைப் பிரிவிற்குக் கீழே வீழ்ச்சியடைந்து வருவதால், சந்தையில் தற்போதைய 4G ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குறைவான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட 4ஜி மொபைல்கள் குறைவாகவே விற்பனையாகின்றன என்று சொல்கின்றனர்.

ட்விட்டர் இந்தியச் சட்டத்தை தொடர்ந்து மீறியது: ஜாக் டோர்சிக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி

ஆகஸ்ட் முதல் தொடங்கும் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக, சரக்குகளை அகற்றும் முயற்சியில், 4ஜி மொபைல்களின் விலைகளை குறைக்கும் முயற்சியில் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உற்பத்தியையும் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் 4G ஸ்மார்ட்போன்கள் விற்பனை கடந்த ஆண்டு வரை 80% ஆக இருந்த நிலையில், இப்போது அது சுமார் 45% ஆகக் குறைந்திருக்கிறது.

மொபைல் நிறுவனங்கள் 4G மாடல்களை அறிமுகப்படுத்துவதைக் குறைத்துள்ளன. குறிப்பாக ரூ.10,000 க்கு மேல் விலை கொண்டவை புதிதாக வருவதில்லை. வாடிக்கையாளர்களும் இப்போது 5G ஸ்மார்ட்போன்களையே கேட்கிறார்கள். இதன் மூலம் விற்பனையாளர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை எளிதில் பூர்த்தி செய்து அதிக லாபம் ஈட்ட முடிகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?

சியோமி போன்ற சில பிராண்டுகள் சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்கள் விற்கப்படாத 4ஜி மாடல்களின் விற்பனையை எளிதாக்குவதற்காக சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது என அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார். இதன் விளைவாக கடைகளில் ஸ்டாக் வைத்துள்ள சரக்குகளை அகற்றும் நோக்கில் 4ஜி போன்களின் விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை குறைந்துள்ளது.

click me!