ஐபோன் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! பிளிப்கார்டில் இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்!

Published : Jun 12, 2023, 01:46 PM ISTUpdated : Jun 12, 2023, 01:49 PM IST
ஐபோன் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! பிளிப்கார்டில் இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்!

சுருக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐபோன் மாடல்களில் ஒன்றாக இருக்கும் ஐபோன் 13 மொபைலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் மிக அதிகமான சலுகை கொடுக்கப்படுகிறது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, புதிய ஐபோன் 13 மொபைலை 58,999 ரூபாய் விலையில் வாங்க முடியும். இதைத் தவிர எக்சேன்ஜ் மற்றும் வங்கி மூலம் பெறக்கூடிய சலுகைகளுப் உள்ளன.

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மொபைலின் 128 ஜிபி வேரியண்ட் ரூ.58,999 விலையில் விற்பனைக்கு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இதன் விலை ரூ. 69,900 ஆகும். அதாவது, அதிகாரபூர்வ விலையைவிட பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10 ,901 குறைவாகச் செலுத்தி ஐபோன் 13 மொபைலை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!

எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ. 750 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். பழைய மொபைலை எக்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோனை மிகக் குறைவான தொகையை மட்டும் செலுத்தி வாங்கிவிடலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐபோன் மாடல்களில் ஒன்றாக இருக்கும் ஐபோன் 13 மொபைலுக்கு பிளிப்கார்ட் அளிக்கும் விலை குறைப்பு சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை. எனவே, ஐபோன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் விரைவாக இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் கீபோர்டில் மாற்றம்! புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகும் எமோஜி பார் அப்டேட்!

ஐபோன் 13 மொபைலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், இரட்டை ரியர் கேமரா (12MP+12MP), செல்ஃபி கேமரா 12MP ஆகியவற்றுடன், இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்களில் விற்பனைக்கு இருக்கிறது. 5ஜி நெட்வொர்க் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக விலை குறைந்த Samsung Galaxy S22! இவ்வளவுதானா.! சூப்பர் டீலை மிஸ் பண்ணிடாதீங்க !!

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்