Nothing Phone (2): விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது நத்திங் போன் 2

By SG BalanFirst Published May 9, 2023, 2:49 PM IST
Highlights

இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் நத்திங் ஃபோன் (2) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கசிந்துள்ளன.

நத்திங் போன் (2) 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதை அந்த நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை. நத்திங் ஃபோன் (2) இந்த கோடை காலத்தில் அறிமுகமாகும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. நத்திங் போன் (2) ஸ்மார்ட்ஃபோனில் வரவிருக்கும் என்னென்ன சிறப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

நத்திங் போன் 2 ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 2 பிராசஸர் உடன் இருக்கும். இது புதிய பிராசஸர் இல்லை என்றாலும் வேகமாக இயங்கக்கூடியுது. சமீபத்திய விலை உயர்ந்த போன்களில் இது பயன்படுத்தப்படுகிறது. நத்திங் போன் 2 முந்தைய மாடலை விட விலை சற்று அதிகமாக இருக்கலாம். நத்திங் போன் (1) இந்தியாவில் ரூ.32,999 ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டது. அது ஸ்னாப்டிராகன் 778G+ பிராசஸர் கொண்டது.

வாட்ஸ்அப் மெசேஜை நம்பி ரூ.5 லட்சம் போச்சு! நண்பர் ஏமாந்த கதையைப் பகிர்ந்த ஜீரோதா சிஇஓ நிதின் காமத்

My take on the Phone (2) teaser! More glyph segments, a bit of red, new patterned textures! pic.twitter.com/XQdMBMk0Tt

— Brandon Paul (3DPCat/BitJeweler) (@3DPrintedCat)

நத்திங் ஃபோன் (2) முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன், முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் இருக்கும். இதைத் தவிர ஸ்மார்ட்போனின் டிசைன் பகுதியில் மாற்றம் வருமா என்பது தெரியவில்லை. சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. பின்புறத்தில் அனைத்து நத்திங் மொபைல்களிலும் உள்ளதைப் போலவே இருக்கும்.

50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, மூன்று பின்புற கேமரா ஆகியவை காணப்படும். சென்சார்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும். 5,000mAh பேட்டரியை நாங்கள் எதிர்பார்க்கலாம். முந்தைய மாடலில் காணப்பட்ட 33W ஃபாஸ்ட் சார்ஜின் வசதி கொண்ட 4,500mAh பேட்டரியை விட பெரியதாக இருக்கக்கூடும். 67W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி கொடுக்கப்படலாம். வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கலாம்.

விலையைப் பொறுத்தவரை நத்திங் போன் 2 ரூ.40,000 அளவுக்கு இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது உறுதி செய்யப்படாத கணிப்பு மட்டுமே. இந்த அம்சங்கள் அனைத்திலும் மாற்றங்கள் இருக்கவும் வாயப்பு உண்டு என்பதும் நினைவில் கொள்ளவேண்டியதாகும்.

லிங்டின் நிறுவனத்தில் 716 ஊழியர்கள் பணி நீக்கம்! சீனாவில் செயல்பாட்டைக் குறைக்கவும் திட்டம்

click me!