வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேஷனில் டெலிகிராம் ஆப்பில் உள்ளது போன்ற சேனல் உருவாக்கம் வசதி விரைவில் சேர்க்கப்பட உள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு தகவல்களை ஒளிபரப்புவதற்கான வாட்ஸ்அப் சேனல்கள் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்து போகும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் பற்றி சமீபத்தில் அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், சேனல்கள் உருவாக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்அப்பில் வழக்கமான சேட் போல இல்லாமல், இந்த சேனல்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படாதவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் சேனல்கள் பயனர்களின் தனிப்பட்ட தேர்வுக்கு உரியதாக இருக்கும் என்றும் ஓர் அறிக்கை கூறுகிறது.
undefined
Jio: அடேங்கப்பா.!! ஒரே மாதத்தில் 10 பில்லியன் டேட்டா செலவிட்ட ஜியோ நிறுவனம்.!!
புதிய சேனல்கள் வசதி ஸ்டேட்டஸ் டேபில் இடம்பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும் என்று தெரிகிறது. விருப்பமான சேனல்களைக் கண்டுபிடித்து பின்தொடர Find Channnels என்ற பட்டன் இருக்கும். சேனலைப் பார்ப்பவர்களுக்கு அதனை உருவாக்கியவரின் பெயர்கள் அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் காட்டப்படாது.
வாட்ஸ்அப்பின் போட்டியாளரான டெலிகிராம் ஆப்பில் இதேபோன்ற சேனல் அம்சம் ஏற்கெனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், பயனர்கள் ப்ரைவேட் மற்றும் பப்ளிக் சேனல்களை உருவாக்கிக்கொள்ளும் வசதி இருக்கிறது. சேனல்களில் பகிரப்படும் தகவல்களை அந்தச் சேனலில் இணைந்துள்ள பயனர்கள் மட்டும் பார்க்க முடியும். சேனல்களில் புதிய தகவல் பகிரப்பட்டால் அது பற்றிய நோட்டிபிகேஷன் சேனல் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.
ஏற்கெனவே இருக்கும் குரூப் போன்ற அம்சம்தான் இது எனவும் சொல்லலாம். ரிப்ளை செய்ய முடியாமல், வரும் தகவல்களைப் பார்க்க மட்டும் அனுமதிக்கும் குரூப் போல சேனல்கள் செயல்படும். இப்போது இந்த வசதியை உருவாக்க வாட்ஸ்அப் நிறுவன டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம். எனவே வாட்ஸ்அப் பீட்டா புரோகிராமில் இணைந்துள்ளவர்களும் இந்த வசதியை முயற்சி செய்து பார்க்க முடியாது.
சுந்தர் பிச்சை சம்பளம் 1800 கோடி! சராசரி ஊதியத்தை விட 800 மடங்கு அதிகம்!