Google Pixel Fold: கூகுள் பிக்சல் ஃபோல்டு மொபைல் எப்போ ரிலீஸ்? விலை விவரம்...

By SG BalanFirst Published Apr 19, 2023, 2:45 PM IST
Highlights

கூகுள் பிக்சல் ஃபோல்டு மொபைல் வரும் மே 10ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அதன் விலை ஏறத்தாழ 1.47 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் எனவும் தெரிகிறது.

மொபைல் சந்தையில் சாம்சங் ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய பல நிறுவனங்கள் போட்டி போட்டு மடிக்கக்கூடிய மொபைல் போன்களைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன். ஆப்பிள் நிறுவனம் விரைவில் மடிக்கக்கூடிய மொபைலை சந்தையில் அறிமுகம் செய்யவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூகுளின் பிக்சல் ஃபோல்ட் குறித்த செய்திகள் பரவி வருகின்றன.

புதிதாகக் கிடைத்திருக்கும் தகவலின்படி கூகுள் தனது பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கூகுள் அதன் புத்தம் புதிய மடிக்கக்கூடிய மொபைல் போனான கூகிள் பிக்சல் ஃபோல்டை மே 10 அன்று வெளியிடும் என ஜான் ப்ரோஸ்ஸர் சொல்கிறார்.

Latest Videos

மே 10 முதல் முன்பதிவு திறக்கப்படும் என்றும் உலக சந்தையில் ஜூன் 27ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் ஃபோல்டுடன் பிக்சல் 7A மொபைலையும் கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் பிக்சல் 7a அடுத்த 14 நாட்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் 6ஜிபி ரேம் போனா! வந்துவிட்டது Redmi 12C

Google Pixel Fold

Announcement: May 10
Pre-order from Google Store: May 10
Pre-order from partners / carriers: May 30
Available: June 27 pic.twitter.com/11zMixDdYy

— jon prosser (@jon_prosser)

கூகுள் பிக்சல் 7a நான்கு நிறங்களில் வெளியாக உள்ளது. இந்த மொபைலின் வருகையால் முன்னர் வெளியான கூகுள் Pixel 6a மொபைல் விற்பனை நிறுத்தப்படாது என்றும் சொல்லப்படுகிறது. கூகுள் பிக்சல் ஃபோல்டு மொபைலின் விலை ஏறத்தாழ 1.47 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூகுள் பிக்சல் 7a விலை 41 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கூகுள் தனது டென்சர் ஜி2 ப்ராஸசருடன் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். Google Pixel Fold மற்றும் Google Pixel 7a ஆகியவற்றில் உள்ள RAM, இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் பிற அம்சங்கள் பற்றி இதுவரை விவரம் தெரியவில்லை.

இதற்கிடையில், கூகுள் பிக்சல் 7a மொபைலில் திரை கூகிள் பிக்சல் 6a மொபைலில் உள்ளதைப் போலவே இருக்கும் என்றும் கைரேகை சென்சாரின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

click me!