2K கிட்ஸ் பாதி பேர் ஆபாச படங்களை பார்க்க வெட்கப்படுவது இல்லை! ஆய்வில் தகவல்!!

By Dinesh TG  |  First Published Jan 16, 2023, 5:02 PM IST

கிட்டத்தட்ட 50 சதவீத டீன் ஏஜர்களுக்கு ஆபாச படங்களை பார்க்க கூச்சமே இல்லை என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளன. 
 


பொதுவாக டீனேஜர்கள், குழந்தைகளுக்கு தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்த தெரிவதில்லை என்று ஏராளமான விவாதங்கள் உள்ளன. குழந்தைகள் வெளியில் இருப்பதை விட ஸ்மார்ட்போனில் தான் அதிகமாக இருக்கின்றனர் எனவும், இதனால் அவர்களது மனநலம் எந்தளவு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் ஸ்மார்ட்போனில் அவர்கள் எதை பார்க்கிறார்கள் என்பதில் தான் விஷயம் உள்ளது.

காமன் சென்ஸ் மீடியா என்ற அமைப்பு அண்மையில் பதின்பருவத்தினரி்ன நடவடிக்கை குறித்து ஆய்வு ஒன்று மேற்கொண்டது. "டீன் ஏஜ் மற்றும் ஆபாசப் படங்கள்" என்ற தலைப்பில் 1,350 பதின்வயதினர்கள் இருந்தனர். செப்டம்பர் 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்றே்றனர். அந்த  ஆய்வில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆபாச படத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
தற்செயலாக ஆபாச படத்திற்கு வந்தனர்:

Latest Videos

பதின்ம வயதினரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது, 58% பங்கேற்பாளர்கள் தற்செயலாக ஆபாச படத்திற்கு அடிமையாகியதாக தெரிய வருகிறது. ஆபாச படத்தை பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் இவர்கள் உள்வரவில்லை. அதிலும், 63% பங்கேற்பாளர்கள் கடந்த வாரத்தில் தாங்கள் ஆபாசத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

டீனேஜ் பங்கேற்பாளர்களில் 44% பேர் தாங்கள் ஆன்லைனில் ஆபாசப் படங்களை வேண்டுமென்றே பார்த்ததாக வெளிப்படுத்தினர். பல பதின்வயதினர் ஆன்லைனில் மல்டிபிளேயர் கேம்களை விளையாடும் போது நண்பர்கள் மூலம் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்திற்கு வந்ததாவும் கூறப்படுகிறது.
வேண்டுமென்றே ஆபாச படம் பார்த்தவர்களில், 38% பங்கேற்பாளர்கள் அதை Instagram மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களில் பார்த்துள்ளனர். இந்தியாவில் TikTok தடைசெய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் உலகம் முழுவதும் செயல்படுகிறது.

இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்

44% பங்கேற்பாளர்கள் ஆபாச பட வலைத்தளங்களில் பார்த்தனர், 34% பேர் YouTube போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் மூலம் அடிமையாகினர். மேலும், 16% பதின்ம வயதினர் சந்தா தளங்களைப் பயன்படுத்தியதாகவும், 18% பேர் ஆபாச படத்தை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புவதாகவும் கணக்கெடுப்பு காட்டுகிறது.

தற்செயலாக ஆபாசத்தைப் பார்த்தவர்கள் மற்றும் வேண்டுமென்றே பார்த்தவர்கள் என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஆய்வு தொடர்ந்தது. அதிில், பாதி இளைஞர்கள் ஆபாசத்தைப் பார்த்த பிறகு வெட்கப்படுவதாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும், பெரும்பான்மையானவர்கள் (67%) கூச்சப்படுவதில்லை என்று வெளியப்படையாகவே சொல்லிவிட்டனர்.

இந்தியாவில் ஆபாசப் படங்கள் தடை:

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, இந்திய அரசாங்கம் அவ்வப்போது பல ஆபாச பட தளங்களை தடை செய்துள்ளது . உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் 800 க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!