Vodafone நிறுவனத்தில் விரைவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்?

By Dinesh TGFirst Published Jan 16, 2023, 1:28 PM IST
Highlights

வோடஃபோன் நிறுவனத்தில் விரைவில் சுமார் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
 

தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக கார்ப்பரேட் துறையில் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிள், ட்விட்டர், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கூட வருவாய் சிக்கலை எதிர்கொள்கின்றனர், எனவே அவற்றின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,  அனைத்து துறைகளிலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றனர். 

கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர், மேலும் 2023 ஆம் ஆண்டும் இதே பதற்றம் தொடர்கிறது. அமேசான், சிஸ்கோ, சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஓலா நிறுவனங்களின் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கைகள் எடுத்த நிலையில்,  தற்போது வோடஃபோன் நிறுவனமும் பொருளாதார நிலைமை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் சுமார் 104,000 பேர் பணிபுரியும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் வோடஃபோன் ஆகும். சுமார்  நூற்றுக்கணக்கான ஊழியர்களை, முக்கியமாக லண்டன் தலைமையகத்திலுள்ள  ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. Vi என்ற பிராண்டின் கீழ் Vodafone ஐடியாவுடன் இயங்கும் இந்தியாவில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஃபைனான்சியல் டைம்ஸின் தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவி் மிகப்பெரிய அளவிலான பணி நீக்ககங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

Amazon, Flipkart Offer 2023 விற்பனை தொடங்கியது.. பொருட்களை வாங்குவதற்கு முன் இந்த டிப்ஸ் பாருங்கள்!

குறிப்பிடத்தக்க வகையில், வோடபோன் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் வீழ்ச்சியை எதிர்கெண்டு வருகிறது. லாபத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், வோடஃபோன் நிறுவனம் தனது மதிப்பில் 40 சதவீதத்தை இழந்தது, இதனால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீடும் தனது பதவியில் இருந்து விலகினார், தற்போது, ​​வோடஃபோனின் தலைமை நிதி அதிகாரியான Margherita Della Valle, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

வோடபோனின் நிறுவனம் இப்படி உள்ள நிலையில், ஓலா நிறுவனமும் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புக் குழுக்களைச் சேர்ந்த பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமேசான் நிறுவனமும் தனது இரண்டாவது சுற்று பணிநீக்கங்களை ஜனவரியில் அறிவித்தது. பொருளாதார நிலைமைகள் காரணமாக உலகளவில் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அமேசான் நிறுவனம் ஏற்கனவே ஹைதராபாத், பெங்களூரு மற்றும் குருகிராம் அலுவலகங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அஞ்சல் அனுப்பியுள்ளது. சுமார் 5 மாத பணிநீக்க ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 

click me!