Best smartphones : ரூ.12,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!

By Dinesh TG  |  First Published Jan 15, 2023, 10:39 AM IST

உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், ரூ.12,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா? இது உங்களுக்கான டாப் ஸ்மார்ட்போன்கள், அதுவும் 12,000 ரூபாய் பட்ஜெட்டில் இங்கு காணலாம்.
 


நீங்கள் இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையை உன்னிப்பாகப் பார்த்தால், ரூ.12,000 விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், Redmi, Realme, Samsung, Poco, Lava மற்றும் இன்னும் சில பிராண்டுகள் பட்ஜெட் பிரியர்களை இலக்காகக் கொண்டு நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன. 

ரெட்மி 10

Tap to resize

Latest Videos

undefined

இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் Redmi 10. இது  ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.12,000 விலையில் வருகிறது. இது இரண்டு வகைகளில் வருகிறது - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி. இந்த போன் ரூ.9,999ல் தொடங்கி ரூ.11,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் Qualcomm Snapdragon 680 SoC, வாட்டர் டிராப் நாட்ச், 6.71 இன்ச் டிஸ்ப்ளே, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 8ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ரேம் உள்ளன. 

Realme C35

Realme C35 என்பது இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் உள்ள மற்றொரு போன் ஆகும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Realme C35 ஆனது 4GB RAM + 64GB மெமரியுடன் ரூ.11,999 விலையில் தொடங்குகிறது. இதில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி  மாடல்களும் உள்ளன. இதில் Unisoc T616 பிராசசர், 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி, முழு HD டிஸ்ப்ளே இன்னும் பல அம்சங்கள் உள்ளன. நீங்கள் கேமரா மற்றும் ஹார்டுவேர் செயல்திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், Realme C35 கருத்தில் கொள்ளலாம்.

ஷாவ்மி 13 லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளிவந்தன!

லாவா பிளேஸ் 5 ஜி

2022 ஆம் ஆண்டில், உள்நாட்டு பிராண்டான லாவா பல்வேறு விலைப் பிரிவுகளில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில், ​​ரூ.12,000 விலையில் லாவா பிளேஸ் 5ஜி போனை வழங்குகிறது. இந்த பட்ஜெட் போன் 5ஜி ஆதரவுடன் வருகிறது. சிறப்பம்ங்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 செயலி, 5,000 எம்ஏஎச் சக்திகொண்ட பேட்டரி மற்றும் 12W சார்ஜர் உள்ளது.

செம்ம ஆஃபர்.. ரூ.14,000 விற்பனையான Smart TV இப்போது வெறும் ரூ.8,000! உடனே முந்துங்கள்!!

Poco M5

Poco M5 ஆனது ரூ.12,499 விலையில் கிடைக்கிறது என்றாலும், Flipkart இல் வங்கி சலுகைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம். அதன் சலுகைகளைப் பொறுத்தவரை, Poco M5 உண்மையில் இந்தியாவில் ரூ. 12000 பட்ஜெட்டில் நீங்கள் விரும்பும் சிறந்த போன்களில் ஒன்றாகும். Poco M5 போனில், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி (512ஜிபி வரை விரிவாக்கக்கூடியது), 6.58 இன்ச் டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் மற்றும் பல உள்ளன.  ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் விலைக்கு, Poco M5 நல்ல ஸ்மார்ட்போனாகும்.
 

click me!