iQOO 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

By Dinesh TG  |  First Published Jan 14, 2023, 3:59 PM IST

ஐக்கூ வாடிக்கையாளர்கள் நீண்ட 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை இங்குக் காணலாம்.
 


இந்தியாவில் வளர்ந்து வரும் முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனம் iQOO ஆகும். சமீபத்தில் ஐக்கூ தரப்பில் வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது iQOO 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 இருப்பதால், இதற்கு முந்தைய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, இந்த ஃபோனின் செயல்திறனை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகம் இருப்பதாக ஐக்கூ தரபபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

iQOO 11: விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

Latest Videos

undefined

iQOO 11 ஸ்மார்ட்போனானது மொத்தம் இரண்டு வகையான வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. அவை, 8GB ரேம் +256GB மெமரி, 16GB ரேம் + 256GB ஆகும். இவற்றில் 8GB ரேம் +256GB மெமரி மாடலின் விலை ரூ.59,999 என்றும், 16GB ரேம் + 256GB மெமரி மாடலின் விலை  ரூ.64,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் வங்கிச் சலுகைகளுடன், இந்த ஸ்மார்ட்போனைசுமார் சுமார் 8 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில்  வாங்கலாம். நீங்கள் அமேசான் பிரைம் சந்தாதாரராக இருந்தால், ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் பிரைம் எர்லி விற்பனையின் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். பிரைம் அல்லாத பயனர்கள் அமேசான் மற்றும் iQOO ஸ்டோர்களில் ஜனவரி 13 முதல் வாங்கலாம். 

iQOO 11 விற்பனை ஆரம்பம்.. நம்பி வாங்கலாமா?

iQOO 11 சிறப்பம்சங்கள்:

iQOO 11 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே, 144Hz ரெப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2,  16GB RAM ஆகியவை உள்ளன. இதன ரேமை கூடுதலாக 8 ஜிபி வரை விரிவாக்கலாம். 

கேமராவைப் பொறுத்தவரையில், iQOO 11 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளன. இதில் 50 மெகாபிக்சல் சாம்சங் லென்ஸ், 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை உள்ளன.  முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. குறைந்த-ஒளியில் கூட நல்ல புகைப்படம் எடுக்கும் வகையில், iQOO 11 ஆனது பிரத்யேக V2 இமேஜிங் சிப்பைக் கொண்டுள்ளது.

கேமிங் செயல்திறனை மேலும் மேம்படுத்த, iQOO 11 ஆனது டூயல் x-லீனியர் மோட்டாரைக் கொண்டுள்ளது, இது கேமிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, 120W வேகமான சார்ஜிங், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளன.
 

click me!