இந்தியாவில் Redmi Note 12, Redmi Note 12 Pro அறிமுகம்: இதன் விலை ரூ.15,499 தொடங்குகிறது!

By Dinesh TGFirst Published Jan 5, 2023, 11:49 PM IST
Highlights

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் ஷாவ்மி ஆகும். இதன் துணை நிறுவனம் ரெட்மி தரப்பில் இந்தாண்டு தற்போது புதிதாக ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. அதன் ஆரம்ப விலை ரூ. 15499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் AMOLED டிஸ்ப்ளேக்கள், பெரிய பேட்டரி மற்றும் வேகமான சிப்செட் ஆகியவை உள்ளன. அனைத்து ஃபோன்களும் IP53 என மதிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெட்மி நோட் 12 சீரிஸ் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Redmi Note 12 சீரிஸ்: விலை, விற்பனை

Redmi Note 12 விலை 15499 ரூபாய் ஆகும், இது 4GB RAM + 128GB மெமரி மாடல். இதே போல், Redmi Note 12 Pro பதிப்பின் விலை 20,999 என்றும்,  Redmi Note 12 Pro+ மாடல் ரூ.25999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரவுள்ளன.  வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை Mi.com மற்றும் ஆன்லைன் ஷாப்பிங், ஆஃப்லைன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போனிலுள்ள அம்சங்கள்:

Redmi Note 12 சீரிஸானது AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12, இரண்டு வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்,  நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் வழங்கல் ஆகியவை உள்ளன. குறிப்பாக, Redmi Note 12 5G ஆனது Snapdragon 4 Gen 1 பிராசசர் உள்ளது. இது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனிலும் உள்ளது. Redmi Note 12 Pro மற்றும் 12 Pro+ மாடல்களில் MediaTek Dimensity 1080 பிராசசர் இடம்பெற்றுள்ளது. எல்லா ஃபோன்களும் MIUI 13 தளத்தில் உள்ளன.

வந்துவிட்டது Samsung Galaxy F04.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

கேமராவைப் பொறுத்தவரையில், Redmi Note 12 5G ஆனது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Redmi Note 12 Pro 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் வேறுபட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் லென்ஸ் ஆகியவை உள்ளன.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் வருகிறது.  Redmi Note 12 5G போன்கள் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வழக்கமான 33W சார்ஜிங்கிற்கான ஆதரவும்,  Redmi Note 12 Pro ஸ்மார்ட்போனில் 67W சார்ஜிங் வசதியும் உள்ளன.

click me!