அறிமுகமானது OnePlus 11 5G.. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

By Dinesh TG  |  First Published Jan 5, 2023, 2:40 PM IST

OnePlus 11 5G சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இந்த பிரீமியம் 5G ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவிற்கு வர உள்ள நிலையில், இதிலுள்ள அம்சங்களை இங்குக் காணலாம்.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய Oneplus 11 5G ஸ்மமார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ளது, வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இருப்பினும், iQOO 11 ஸ்மார்ட்போன் வந்தவுடன் ஒன்பிளஸ் 11 ஸ்மார்டபோனை ஒப்பீடு செய்து வாங்குவது நல்லது. ஏனெனில், ஒன்பிளஸில் உள்ள அம்சங்களை விட, மேம்பட்ட அம்சங்கள்    iQOO ஸ்மார்ட்போனில் உள்ளன. சீனாவில் ஏற்கெனவே இது வந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒன்பிளஸ் 11 5ஜி பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகமாகிறது, iQOO 11 பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. 

இப்போது சீனாவில் அறிமுகமாகியுள்ள OnePlus 11 5G பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்:

Latest Videos

undefined

OnePlus 11 ஆனது வழக்கமான 6.7-இன்ச் QHD+ E4 OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இதில் 120Hz ரெப்ரெஷ் ரேட்,  OnePlus HDR 10+ வசதி, LTPO 3.0 ஆகியவை உள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது வழக்கமான பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பையும், சற்று வித்தியாசமான பின்புற பேனல் வடிவமைப்பையும் இதில் பார்க்கலாம். புதிதாக வெளிவந்துள்ள Qualcomm Snapdragon 8 Gen 2 SoC பிராசசர் இருப்பது சிறப்பு.

அதே போல், 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதிலுள்ள UFS 4.0 சேமிப்பகம் இருப்பதால் சிறந்த செயல்திறனை வழங்க உதவும். வழக்கம் போல், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை விரிவாக்க முடியாது. எனவே, மக்கள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளை தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். 

Chrome Update: இந்த 2023 ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்களில் Google Chrome சேவை நிறுத்தம்!

கேமராக்களைப் பொறுத்தவரை, OnePlus 11 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, OIS வசதியுடன் 50-மெகாபிக்சல் Sony IMX890 பிரைமரி சென்சார் கேமரா,  48-மெகாபிக்சல் Sony IMX581 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கேமரா, 32-மெகாபிக்சல் Sony IMX709 2x டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

OnePlus 11 5G: விலை

OnePlus 11 5G ஆனது 12 ஜிபி + 256 ஜிபி மாடலில் RMB 3,999 ஆரம்ப விலையுடன் வருகிறது, இது மாற்றப்படும் போது இந்தியாவில் சுமார் ரூ.48,000 ஆகும். எனவே, இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.50,000 வரம்பில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதே போல் 16GB + 256GB மாடலின் விலை RMB 4,399 (சுமார் ரூ. 52,900) மற்றும் 16GB + 512GB வேரியண்டின் விலை RMB 4,899 (தோராயமாக ரூ. 59,000) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

click me!