ஜன. 4 ஆம் தேதி Samsung Galaxy F04 அறிமுகம்! விலை ரொம்ப கம்மியா? விவரங்கள் இதோ!

By Dinesh TG  |  First Published Jan 2, 2023, 8:03 PM IST

Samsung Galaxy F04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள், விலை குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.உறுதி செய்துள்ளது.


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் சாம்சங் நிறுவனம் உள்ளது. தற்போது சாம்சங் புதிதாக Samsung Galaxy F04 என்ற மலிவு விலை ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது இது இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கெனவே, Samsung Galaxy F04 பற்றிய வதந்திகள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பரவி வருகின்றன. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக Samsung Galaxy F04 இன் அதிகாரப்பூர்வ விவரங்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும், Flipkart தளத்தின் பிரத்யேக ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tap to resize

Latest Videos

undefined

Samsung Galaxy F04 ஸ்மார்ட்போனிலுள்ள சிறப்பம்சங்கள்:

Galaxy F04 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா இருக்கும் இடத்தோடு வருகிறது. பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன.

மீடியா டெக் ஹீலியோ பி35 பிராசசர், 8 ஜிபி ரேம் வரை விரிவாக்கம், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எதிர்பார்க்க முடியாது.

முகப்புப் பயன்பாட்டில் முழு டிவி கட்டுப்பாடுகளை Google அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்

இந்தியாவில் Samsung Galaxy F04 விலை, விற்பனை தேதி:

சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனானது சுமார் 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருக்கும் என்று பிளிப்கார்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7499 அல்லது ரூ. 7999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தியாவில் Samsung Galaxy F04 ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், மேலும் இந்த போன் Flipkart இல் கிடைக்கும்.

எனவே, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம். முழுமையான அறிமுகத்திற்குப் பிறகு விலை விவரங்கள் தெரியவரும். 
இப்போது, ​​Samsung Galaxy F04 தவிர, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S23 சீரிஸ் ஸ்மார்ட்போனும் வெளியாக உள்ளது. இந்த சீரிஸில் Samsung Galaxy S23, Galaxy S23 Plus மற்றும் Galaxy S23 Ultra ஆகிய மூன்று ஃபோன்கள் அடங்கும். கேலக்ஸி எஸ் சீரிஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

click me!