அடுத்த மாதம் OnePlus 11 5G.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Published : Jan 16, 2023, 02:29 PM IST
அடுத்த மாதம் OnePlus 11 5G.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

சுருக்கம்

OnePlus 11 5G சீனாவில் அறிமுகமான நிலையில், தற்போது இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகமாக உள்ளது. இது குறித்த விவரங்கள், எதிர்பார்க்கப்படும் விலை, சிறப்பம்சங்களை இங்குக் காணலாம். 

பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் முன்னனி இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  ஆராய்ச்சி நிறுவனங்கள், கவுண்டர்பாயிண்ட் மற்றும் CMR இந்தியா ஆகியவற்றின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பட்ஜெட் மற்றும் பிரீமியம் போன் பிரிவுகளில் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக ஒன்பிளஸ் நிறுவனம் இருப்பதாக தெரிகிறது. கடந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய நிலையில், இந்தாண்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 அன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் OnePlus 11 மற்றும் Buds Pro 2 வெளியிட உள்ளன.

இந்த ​​ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் கிடைக்கிறது. இருப்பினும் சில சில மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாக OnePlus 11 5G ஆனது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OxygenOS 13 உடன் வருகிறது.  அதே சமயம் சீனா மாடல் Oppo ColorOS 13 உள்ளது. மற்றபடி, டிசைன் பொறுத்தவரையில், இந்திய மாடலும், சீன மாடலும் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கும். 

சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில்  6.7 இன்ச் QHD+ E4 OLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், HDR 10+ தொழில்நுட்பம் உள்ளன.  சீனா மாடலில் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. இந்தியா மாடலும் மேம்படுத்தப்பட்டு 100W சார்ஜிங், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒன்பிளஸ் தனது வழக்கமான மாடலில் வயர்லெஸ் சார்ஜிங்கை தவிர்த்துவிட்டு, ப்ரோ வேரியண்டில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50-மெகாபிக்சல் Sony IMX890 சென்சார், 48-மெகாபிக்சல் Sony IMX581 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 32-மெகாபிக்சல் Sony IMX709 2x டெலிபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். சீனாவில் ஒன்பிளஸ் 11 விலை 48,500 ரூபாயில் தொடங்குகிறது. இந்தியாவில் வரிகளைச் சேர்க்கப்பட்டு  55,000 ரூபாயைத் தொடலாம். 
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அதிரடி விலையில் iPhone 16! வங்கி ஆஃபருடன் அள்ளிச் செல்லலாம்.. முழு விவரம் உள்ளே!
ஜியோ, ஏர்டெல்-க்கு இனி டஃப் பைட் தான்! சாட்டிலைட் இன்டர்நெட் கட்டணம் உயராது.. டிராய் எடுத்த அதிரடி முடிவு!