தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த ஆர்டரின் பேரில் இந்த மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது போட் டெயில் திட்டத்தின் இரண்டாவது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 2022 கான்கார்சோ எலிகன்ஸ், வில்லா எஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தனது குடும்பத்தார் மற்றும் தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த ஆர்டரின் பேரில் இந்த மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் மதர் ஆஃப் பியல்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய போட் டெயில் மாடல் விலை 28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 217 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
அதிக மாற்றங்கள்:
முந்தைய போட் டெயில் மாடலுடன் ஒப்பிடும் போது, புது மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. முதல் போட் டெயில் மாடலில் ஃபேண்டம் மாடலின் அலுமினியம் பிளாட்பார்ம், 6.75 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலின் பாடி பேனல்களும் ஒரே மாதிரி தான் இருந்தது. புதிய போட் டெயில் மாடலில் இவை அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. மேலும் இந்த காரை யார் உருவாக்க சொன்னார்கள் என்ற விவரத்தை ரோர்ஸ் ராய்ஸ் வெளியிடவில்லை.
ஏராளமான பாரம்பரிய கார் மாடல்களை வாங்கி குவித்து வைத்து இருக்கும் நபர் தான் இந்த காரை வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. இவர் தனியார் அருங்காட்சியகம் ஒன்றை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாடிக்கையாளரின் தந்தை முத்துக்களை சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர் ஆவார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் புதிய போட் டெயில் மாடலை மதர் ஆப் பியல் தீமில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனித்துவம் மிக்க மாடல்:
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கன்வெர்டிபில் என்பதால், பொறியாளர்கள் மற்றும் டிசைனர்களுக்கு அதிகளவு சுதந்திரத்துடன் காரை டிசைன் செய்ய முடிந்தது. இதனாலேயே இந்த கார் மிகவும் தனித்துவம் மிக்க மாடலாக உருவாகி இருக்கிறது. காரை உருவாக்கக் கூறிய வாடிக்கையாளர் சேகரித்து வைத்து இருந்த முத்துக்களில் நான்கு இந்த மாடலின் டிசைனிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த காரின் வெளிப்புற நிறம் வெவ்வேறு வெளிச்சங்களுக்கு ஏற்ப தானாக மாறும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறத்தை உருவாக்க ஓய்ஸ்டர், சாஃப்ட் ரோஸ், லார்ஜ் வைட் மற்றும் பிரான்ஸ் மைகா பிளேக்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. பின்புற டெக் பகுதியில் பாரம்பரியம் மிக்க பட்டர்பிளை டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் புதிய ராயல் வால்நட் வினீர் மற்றும் கோல்டு பிளேட் செய்யப்பட்ட பின்ஸ்டிரைப்ஸ், சேடின் பிரஷ் செய்யப்பட்ட பினிஷ் கொண்டுள்ளது.