லோ பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? ரூ. 8 ஆயிரத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாடல்கள் இதோ..!

By Kevin KaarkiFirst Published May 22, 2022, 5:22 PM IST
Highlights

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 8 ஆயிரம் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிநவீன மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நாளுக்கு நாள் ஏராளமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், அதற்கு ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. இந்திய சந்தையில் ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களின் சிறப்பம்சங்கள் வேறுபட்டே இருக்கும். 

சில மாடல்களில் சிறந்த அனுபவம், சில மாடல்களில் சிறந்த பேட்டரி பேக்கப், தலைசிறந்த கேமரா, அசத்தல் டிசைன் என ஒவ்வொரு பிரிவில் அதிக கவனம் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிக சிறப்பம்சங்களை எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் ரூ. 8 ஆயிரம் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிநவீன மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

5 - டெக்னோ ஸ்பார்க் 7T:

டெக்னோ ஸ்பார்க் 7T எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒற்றை ரேம் மற்றும் மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில் 6.52 இன்ச் HD+ டாட் நாட்ச் IPS டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, 48MP பிரைமரி கேமரா, 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

4 - சியோமி ரெட்மி 9A:

சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ரெட்மி 9A. இது ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த மாடல்களில் ஒன்று எனலாம். இதில் 6.53 இன்ச் ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர், 2GB ரேம், 32GB மெமரி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா, 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

3 - ரியல்மி நார்சோ 50i:

ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கொடுக்கும் பணத்திற்கு ஈடான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் ரிய்லமி நார்சோ 50i. இதில் 6.50 இன்ச் IPS எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் SC9863A பிராசஸர், 2GB ரேம், 32GB மெமரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
2 - இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5:

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்  5 மாடலில் 6.82 இன்ச் டிஸ்ப்ளே, 13MP பிரைமரி AI டூயல் கேமரா, 8MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G25 ஆக்டா கோர் பிராசஸர், 2GB ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் X ஓ.எஸ். 7 ஸ்கின், 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

1 - சாம்சங் கேலக்ஸி M02:

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரத்து 999 ஆகும். இந்த மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739W பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 2GB ரேம், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

click me!