இனி எல்லோரும் போல்டபில் போன் வாங்கலாம்... சூப்பர் ஸ்கெட்ச் போடும் சாம்சங்...!

By Kevin Kaarki  |  First Published Jun 6, 2022, 4:24 PM IST

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. 


சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கேலக்ஸி ஃபோல்டு கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன் பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை சாம்சங் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன் படி கேலக்ஸி Z ப்ளிப் மாடல் சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் தோற்றம் மோட்டோரோலா ரேசர் போன் போன்றே காட்சி அளித்தது.
 
இந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போனின் புது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது மாடல் லைட் வெர்ஷன் பிராண்டிங்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வப்போது இந்த தகவல் வதந்தியாக இருக்குமோ என்றும் கூறப்பட்டு வந்தது.  

கேலக்ஸி A சீரிஸ் மடிக்கக்கூடிய போன்:

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், சாம்சங் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான பணிகளில்  சாம்சங் நிறுவனம் மும்முரமாக ஈடுட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு லைட் Z சீரிஸ் மாடலாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி A சீரிஸ் பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இருக்கும் என்றும், இதில் 7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிக மெல்லிய கிளாஸ் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் விலை சாம்சங் நிறுவனத்தின் தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருவதால், தற்போது அதனை குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் பணிகளில் சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

click me!