ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் இந்திய விலை அறிவிப்பு... ஜஸ்ட் ரூ. 2. 61 கோடி மட்டுமே..!

By Kevin Kaarki  |  First Published Jun 6, 2022, 2:50 PM IST

இதன் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு லேண்ட் ரோவர் மாடல் 113 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.


லேண்ட் ரோவர் நிறுவனம் ரேன்ஜ் ரோவர் பிளக் இன் ஹைப்ரிட் (PHEV) மாடலின் இந்திய விலை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய லேண்ட் ரோவர் PHEV மாடல் விலை ரூ. 2 கோடியே 61 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 கோடியே 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பிளக் இன் ஹைப்ரிட் வாகனமாக புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் அமைந்து உள்ளது. ரேன்ஜ் ரோவர் PHEV மாடல் ரெகுலர் மற்றும் லாங்-வீல்பேஸ் பாடி ஸ்டைல் கொண்டுள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் 3.0 லிட்டர் இன்ஜெனியம் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. 

Tap to resize

Latest Videos

பவர்டிரெயின் ஆப்ஷ்கள்:

ஸ்டாண்டர்டு ரேன்ஜ் ரோவர் PHEV மாடல் - P440e மற்றும் P510e  என இருவித அம்சங்களுடன் கிடைக்கிறது. இதன் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 105 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. P440e மாடல் 435 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இதன் P510e மாடல் 503 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

உறுதியான ஹைப்ரிட் மாடல் என்ற வகையில், இதன் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு லேண்ட் ரோவர் மாடல் 113 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. நிஜ பயன்பாடுகளில் இந்த மாடல் 88 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரி பேக் உடன் அதிகபட்சம் 50 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு உள்ளது. இது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றி விடும். 

ஐந்து வேரியண்ட்கள்:

ரேன்ஜ் ரோவர் PHEV மாடல் - SE, HSE, ஆட்டோபயோகிராபி, பர்ஸ்ட் எடிஷன் மற்றும் SV என மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் மற்றும் பாடி ஸ்டைல்களில் வழங்கப்படுகிறது. இதன் SV வேரியண்ட் ஸ்டாண்டர்டு வீல்பேஸ் உடன் சக்திவாய்ந்த PHEV பவர்டிரெயின் உடன் வழங்கப்படுகிறது. 

click me!