எலெக்ட்ரிக் 2 வீலர்களுக்கு வரி ரத்து.. வெளியான மாஸ் அறிவிப்பு..!

By Kevin Kaarki  |  First Published Jun 6, 2022, 1:26 PM IST

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டு இருக்கும் சரிவு தற்காலிகமான ஒன்று என்று தான் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். 


எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், மேற்கு வங்க மாநிலத்தில் எலெகர்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை மேற்கு வங்க மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் விற்பனை செய்து, பதிவு செய்யப்படும் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் எவ்வித பதிவு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக மாநிலத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான செலவு பெருமளவு குறையும். வழக்கமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கும் போது பதிவு கட்டணம் மட்டுமே அதிக செலவு செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. 

Tap to resize

Latest Videos

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வரி ரத்து:

மேற்கு வங்க மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புது திட்டம் ஏபர்ல 1, 2022 துவங்கி 2024, மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் வரி கால அளவை நீட்டிக்கப்பட இருக்கின்றன. 

எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படும் முயற்சியாக மேற்கு வங்க அரசாங்கம் செய்து இருக்கும் புது நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்து இருக்கிறது. மேற்கு வங்க அரசின் புது திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து, பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் அதிகளவு விற்பனை மையங்களை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விற்பனை சரிவு:

வாகன் (WAHAN) வலைதள விவரங்களின் படி மே 2022 மாதத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை 20 சதவீதம் சரிவடைந்தது. மே மாதத்தில் இந்தியா முழுக்க 39 ஆயிரத்து 339 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டு இருக்கும் சரிவு தற்காலிகமான ஒன்று என்று தான் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். 

எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகள் வெடிப்பது குறித்து அச்சம் மற்றும் வினியோக பணிகளில் ஏற்பட்டு இருக்கும் சரிவு உள்ளிட்ட காரணங்களால் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டது என கூறப்படுகிறது.  

click me!