இந்திய சந்தையில் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படலாம்.
கூகுள் நிறுவனம் 2022 கூகுள் I/O கீநோட் நிகழ்வில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருந்தது. எனினும், பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்திய சந்தையில் பிக்சல் 6a மாடல் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கூகுள் பிக்சல் 5a மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் பிக்சல் 5a ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் நீண்ட காலமாகவே விற்பனை செய்யப்படாமல் இருந்தது. தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் கூகுள் பிக்சல் 5a ஸ்மார்ட்போன் ரூ. 31 ஆயிரத்து 350 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
கூகுள் பிக்சல் 5a அம்சங்கள்:
இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் பிக்சல் 5a மாடல்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு உற்பத்தியாளர் வழங்கும் வாரண்டியும் வழங்கப்படுகிறது. எனினும், அதன்பின் சர்வீஸ் வசதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை கூகுள் பிக்சல் 5a ஸ்மார்ட்போனில் 6.34 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, HDR சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி, 4680mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, 16MP அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 6a மாடலில் 6.1 இன்ச் FHD+OLED மற்றும் HDR சப்போர்ட், கூகுள் டென்சார் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. குறைந்த செலவில் சிறப்பான செயல்திறன் மற்றும் அனுபவத்தை பெற வேண்டும் எனில் பிக்சல் 5a மாடலை வாங்கலாம்.