டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வளர்ச்சி மெல்ல சூடுப்பிடிக்கத் துவங்கி இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் ஹேச்பேக் முதல் செடான் மற்றும் எஸ்.யு.வி. / கிராஸ் ஓவர்கள் என பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த கார் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இவை தவிர மேலும் சில நிறுவனங்களும் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறஉவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றில் அதிக ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
undefined
பி.எம்.டபிள்யூ. i4:
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் i4 செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் பி.எம்.டபிள்யூ. i4 மாடலில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ரியர் ஆக்சில் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 335 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கியா EV6:
இந்தியாவில் மொத்தமே 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருக்கும் கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 226 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 320 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு வித டியூனிங்கில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் ஆல் வீல் டிரைவ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 425 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
ஆடி இ-டிரான் GT:
ஆடி நிறுவனத்தின் மூன்றாவது இ-டிரான் மாடலாக இந்தியாவில் அறிமுகமான இ-டிரான் GT மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட மாடல் ஆகும். இந்திய சந்தையில் ஆடி இ-டிரான் GT மாடல் விலை ரூ. 1 கோடியே 65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
ஆடி இ-டிரான் எஸ்.யு.வி. / ஸ்போர்ட்பேக்:
ஆடி இ-டிரான் GT மாடலுடன் ஒப்பிடும்போது இ டிரான் 50 எஸ்.யு.வி. மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டு இருக்கிறது. இ டிரான் 50 மாடலில் 71 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 379 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. 55 மாடலில் உள்ள 95 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
ஜாகுவார் ஐ பேஸ்:
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் மார்ச் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.