New Maruti Suzuki Breeza 2022: டாப் டக்கர் அப்டேட்களுடன் உருவாகும் 2022 பிரெஸ்ஸா.... விலை இவ்வளவு தானா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 06, 2022, 03:46 PM ISTUpdated : Jun 06, 2022, 06:07 PM IST
New Maruti Suzuki Breeza 2022: டாப் டக்கர் அப்டேட்களுடன் உருவாகும் 2022 பிரெஸ்ஸா.... விலை இவ்வளவு தானா?

சுருக்கம்

Maruti Suzuki vitara Breeza 2022 launch Date, Price in india புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.  

புதிய தலைமுறை மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக உள்ளது. மேம்பட்ட எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2022 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய சந்தையாவில் கியா சொனெட், மஹரிந்திரா XUV300, டாடா நெக்சான் மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

புது மாடலின் பெயரில் மாற்றம் செய்யவும் மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன் படி புதிய மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா என்றே அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் விட்டாரா என்ற பெயர் நீக்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில், புதிய பிரெஸ்ஸா மாடலின் முன்புறம் முற்றிலும் புதிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப் மற்றும் L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த எஸ்.யு.வி. மாடலின் பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட், சுசுகி லோகோவின் கீழ்புறம் பிரெஸ்ஸா என்ற எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. 

காரின் உள்புறத்தில் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிப்டர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, சுசுகி கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.

என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய XL6 மற்றும் எர்டிகா மாடலில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த என்ஜின் 103 பி.எஸ். பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 

இந்திய சந்தையில் தற்போதைய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 84 ஆயிரத்தில் துவங்குகிறது. அந்த வகையில் ஏராளமான அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!