இந்தியாவில் Samsung Galaxy A14, A23 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
சாம்சங் நிறுவனம் இன்று இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை: கேலக்ஸி A14 5G மற்றும் Galaxy A23 5G ஆகும். இவற்றில் Galaxy A14 5G ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.16499 என்றும், A23 5G விலை ரூ.22,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்தை முன்னிட்டு சலுகையின் ஒரு பகுதியாக சில குறிப்பிட்ட வங்கி தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் Samsung Galaxy A14 5G விலை:
இந்த ஸ்மார்ட்போன் அடர் சிவப்பு, வெளிர் பச்சை மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண நிறங்களில் வருகிறது. இவற்றின் விலைகள்:
தள்ளுபடி சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ, IDFC மற்றும் ZestMoney ஆகியவற்றின் மூலம் ரூ.1500 கேஷ்பேக் பெறலாம்.
Galaxy A14 5G சிறப்பம்சங்கள்:
Samsung Galaxy A14 5G ஆனது 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ், 5000mAh பேட்டரி, டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் கூடிய 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளன. குறிப்பாக இதில் பிரைவேட் ஷேர் அம்சம் இருக்கிறது. இதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பாதுகாப்பாகப் பகிரலாம். இந்த ஃபோன் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட், இரண்டு OS மேம்படுத்தல்களுடன் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் சொந்த Exynos 1330 ஆக்டோ கோர் பிராசசர் உள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy A23 5G விலை:
இந்த ஸ்மார்ட்போன் சில்வர், லைட் ப்ளூ மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ண நிறங்களில் வருகிறது. இவற்றின் விலைகள்:
தள்ளுபடி சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ, IDFC மற்றும் ZestMoney ஆகியவற்றின் மூலம் ரூ.1500 கேஷ்பேக் பெறலாம்.
Galaxy A23 5G சிறப்பம்சங்கள்:
சாம்சங் Galaxy A23 5G ஃபோனில் 6.6-இன்ச் FHD+ திரை, 120Hz ரெப்ரெஷ் ரேட், 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அடாப்டிவ் பவர்-சேவிங் மோட், அல்ட்ரா-வைட், டெப்த் மற்றும் மேக்ரோவுடன் கூடிய குவாட் கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன. 3.5 வருட பாதுகாப்பு இணைப்பு அப்டேட், Exynos 1330 ஆக்டா கோர் பிராசசர் உள்ளது.